பொய்யும் மெய்யும்
*குட்டிக்கதை*
* *பொய்யும் மெய்யும்* *
*எங்க ஊர்ல அய்யா கண்ணு* *வாத்தியார்னு* *ஒருத்தர்* இருந்தார்.
ஆரம்ப பாடசாலையிலே வேலை.கதை நல்லா
சொல்லுவார்..
ஆனால், அத்தனையும் பொய் கலந்திருக்கும்..
கற்பனை ஓட்டம் மிக நேர்த்தியாக இருக்கும்... சொல்வதெல்லாம்
உண்மை போல இருக்கு... பாதி பொய் கலந்திருக்கும்....
டே!
பசங்களா ! உங்க வயசுல நான் சிலம்பம் கற்று நல்ல தேர்ச்சி பெற்றவன்டா !
ஒரு முறை படைவீச்சு வீசும் போது கால் இடறிவிட்டது அதுல இருந்து இப்ப வர கம்பு தொடுவதில்லை
என்று சலித்துக் கொள்வார்...
ஆனா
சிலம்பு கலையில் சிலாவரிசை கூட
தெரியாது.
அவர் கால் வழுக்கி வயலில் விழுந்தது இருட்டுல தண்ணீர் பாய்ச்சிய போது, லேசா கால் சுணக்கம் போட்டு நடப்பார்.
இவர் ஊரு விட்டு ஊர் வந்ததால அந்த விபரம் யாருக்கும் தெரியாது.
வர்மக் கலை அத்துபடிடா!எங்க தாத்தா சாகும் போது சத்தியம் வாங்கிட்டாருடா !
அதனால் தான் அதை யாருக்கும் காத்துக் கொடுக்க முடியாமல் போயிட்டது என்று வாய் கூசாமல் பொய் சொல்லுவார்.
இதைக் கேட்ட பசங்களுக்கு நாமும் நம் ஆசிரியரைப் போல
பல கலைகளை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது...
அடே! நான் சுத்த சைவம்.. எந்த இறைச்சியும் சாப்பிடுவதில்லை,
முட்டை கூட என்பார்.
காரணம்
உயிர்கள் மீதுள்ள
கருணை தான் என்பார்.
குழந்தைகளுக்கு
இவர் மீது தனி பிரியம்.ஊர்ல ஆடு
வெட்டினா இரண்டு
கிலோ எடுப்பார், யாரும் கேட்டா என் வீட்டுக்காரி சாப்பிடுவாள் என
சமாளிப்பார்.
ஆனால் அவர் மனைவிதான் சுத்த
சைவம்.பால், முட்டை,இறைச்சி எதுவும் உண்ணமாட்டார்.
இவர் பீடி கூட பிடிப்பது வழக்கம்.. அதைக் கூட ஆரம்பத்தில் இருந்து இரகசியமாக பாதுகாத்து வந்தார்.
பீடி தீர்ந்து போனால்,மணி என்ற ஒரே மாணவனை மட்டுமே பயன் படுத்துவார்.அதுவும் இவரது நடையில்
பிரச்சனை என்பதால்.
கடைக்காரர் தருவதைத் திறந்து பார்க்காமல் கொண்டு வரவேண்டும் என
கட்டளையும் போடுவார்.
கடையில் வாத்தியாருக்கு
என்றவுடன் தாளில்
சுற்றி பிரிக்காமல் கொண்டு போ! என
கடைக்காரர் வேறு
அதட்டுவார்.
எனக்கு சோதிடம் நல்லா தெரியும் என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு மாணவனுக்கும் கை பார்த்து உனக்கு மருத்துவராகும் வாய்ப்பு உள்ளது..நீ பொறியாளர் ஆகலாம், உனக்கு அரசாங்க வேலை வாய்ப்பு உண்டு என்றெல்லாம் உற்சாகப் படுத்துவார்...
காலம் உருண்டோடி யது...
நிறைய மாணவர்கள் நல்லா
படித்து, நல்ல உத்தியோகத்திற்கு
போனார்கள்.
அந்த ஊரிலே நல்ல கதை ஆசிரியர்கள் உருவானார்கள்.
நிறையப் பேர் சைவம் சாப்பிடும் மாணவர்களாக மாறினார்கள்.
நல்ல கலைகளை, பல ஊர் தேடிச் சென்று
கற்றார்கள்.
படிக்கச்
சென்ற கல்லூரியில் உங்கள் முன் மாதிரி யார் என்றால் எங்கள் *அய்யா கண்ணு* *ஐயா!* அவர்தான்
எங்களுகபட ஆர்வம்
ஊட்டினார் என்று
பெருமையாக சொல்வார்கள்.
சுத்துப் படஇ கிராமத்திலே அந்த
ஊருல தான் யாரும் வீண் போக வில்லை.
கல்லூரிக்கே இவர் வந்த பின்புதான் கால்
வைத்தார்கள்.
தொடக்கப் பள்ளி தாண்டாத கிராமம்.
இப்போது எல்லோரும் உயர்ந்த படிப்பு,உயர்ந்த உத்தியோகம் ..
அய்யா கண்ணு வாத்தியார் ஓய்வு பெற்று விட்டார்.ஊரின் ஒதுக்குப் புறம் அவரது சிறு ஓடு போட்ட வீடு, மழை காலத்தில் லேசா ஒழுகும்.
பழைய மாணவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஊரின் நடுவில் இடம் வாங்கி அழகான புதிய கட்டிடம் ஒன்று கட்டினார்கள்.
அதில்
அத்தனை கலை அம்சமும் நிறைந்து இருந்தது. அழகு அழகான பூச்செடிகள், அந்த
ஊரிலே அதுதான்
உயர்ந்த கட்டிடமும்,அழகானதும் கூட.
அய்யா கண்ணு வாத்தியார் எப்போதாவது தான்
ஊருக்குள்ள போவார்.
அவருக்கு அவ்வளவு மரியாதை,தம் பிள்ளைகள் எல்லாம் அவரால் தானே உயர்ந்தார்கள் என்ற நன்றியுணர்வு டன்
அந்த ஊர் மக்கள்
உறவில் ஒன்றாகவே பார்த்துக் கொண்டனர் அவரை.
கட்டிடத் திறப்பு நாளும் வந்தது.
நோட்டீஸ் அச்சிடப் பட்டது.
கட்டிடத் திறப்பாளர்:
ஐயா,அய்யா கண்ணு ஆசிரியர்
அவர்கள்.
குத்துவிளக்கு ஏற்றுபவர்: திருமதி,
கமலம் அய்யா கண்ணு ஆசிரியர் அவர்கள்.
தலைமை: மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்.
சிறப்பு விருந்தினர்:
ஊர் பொது மக்கள்.
முதல் நோட்டீஸ் அய்யா கண்ணு ஆசிரியருக்குத் தான் கொடுத்தார்கள்.
அய்யா கண்ணு ஆசிரியருக்கு பெருமையாக இருந்தது.
தன்னை
பெருமை படுத்தியதற்கு அல்ல, படிக்காத தன் மனைவியை பெருமை படுத்தியதற்கு.
திறப்பு நாளும் வந்தது,
அய்யா கண்ணு வாத்தியார் மிடுக்காக வேஷ்டி
கட்டி தெரு வழியாக
முதன் முதலாக தன்
மனைவியுடன் நடுத்தெரு வழியாக
நடந்து போனார்.
ஊரே விழா கோலம்!
அவர் வருவதைப் பார்த்து எல்லோரும் எழுந்து
நின்றார்கள்.
மனைவிக்கு மனதுக்குள் எல்லையற்ற சந்தோசம்.
தம் கணவருக்கு
இவ்வளவு மரியாதையா
என்று மனம் பூரித்தது.
பக்கத்து ஊர் கூட்டம் எல்லாம் கூடியிருந்தது.
வாத்தியார் வருவதைப் பார்த்து
கூட்டமே எழுந்து நின்றது.
அதைப் பார்த்து *மாவட்ட* *ஆட்சியரே* எழுந்து
நின்று கை கூப்பி
வணங்கியது டன் அவரே அய்யாவை
இருக்கையில் அமர
வைத்த பின்பு தான் அமர்ந்தார்.
குத்துவிளக்கு ஏற்றி பின்பு சிறப்புரை ஆற்ற, அய்யா கண்ணு வாத்தியார் வந்தார்.
தன் பேச்சை இப்படித் தொடங்கினார்.
*நான் ஒரு* *பொய்யான* *ஆசிரியர் என்று* ...
"என் மாணவர்கள்
வளர்ச்சிக்காக பொய் சொன்னேன் !
எனக்காக அல்ல,
நான் மாமிசம்
சாப்பிடுவேன்,
முட்டை,பால், இறைச்சி எல்லாம் சாப்பிடுவேன்,
என் மனைவிதான் சுத்த சைவம் எதுவும் சாப்பிடுவதில்லை!
ஆனால், இத்தனை
இரகசியத்தையும் நான் மறைக்கப் பட்ட கஷ்டம் இருக்கே அது கொஞ்சம்
நெஞ்சம் அல்ல,
என் பொய்யால் என் மாணவர்கள்
உயர்ந்தார்கள்.
நான் பீடி கூட பிடிப்பதுண்டு.
சிலம்பம் எப்படி சுற்றுவது என்று கூட எனக்கு தெரியாது,அதில் ஆர்வம் உள்ள குழந்தைகள் கற்றுக் கொள்ளட்டுமே என்று சொல்லி வச்சேன்.வர்மம்,சோதிடம் எல்லாம்
தெரியும் என்று நான் பொய்யனாகி
என் மாணவர்களை
உண்மையாளர்களாக உருவாக்கினேன்" என்று கூறி, என் பொய்யை , என்
மாணவர்கள் மன்னிக்குமாறு வேண்டுகிறேன் என் கூறி முடித்தார்...
பழைய மாணவர்கள் ஆரவாரத்துடன் கை தட்டி இரசித்தார்கள்,
ஊரே பாராட்டியது.
ஆசிரியர் தம்பதியினரிடம் மாவட்ட ஆட்சியர்
சாவியை கொடுத்து, *இது ஊரே சேர்ந்து கட்டிய உங்களுக்கான வீடு* என்று கூறி, இரகசியத்தை உடைத்தார்கள்
மாணவர்கள் கை தட்டு
விண்ணை முட்டியது !
அய்யா கண்ணு வாத்தியார் கண்ணில் ஆனந்த
கண்ணீர்.
இதற்கு
என்னால் என்ன கைமாறு
செய்யமுடிம் என்று
கேட்டார்.
எங்களை
வாழ வைத்த தெய்வத்திற்கு கோயில் கட்டி இருக்கிறோம் என்று மொத்த
குரலும் ஒலித்தது.
இனி மழை காலத்தில் ஒழுகும்
இடத்திற்கு மண் கலசம் தேவையில்லை என்று கமலம் அம்மா,
இதயத்தால் நிறைந்து நின்றார்...!
*ஊர் நடுவிலே ஒரு வீடு!*
நம்ம முப்பாட்டன் வள்ளுவர் சொன்னது நினைவிற்கு வந்தது...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*இன்றைய சிந்தனைக்கு*
*அதிகாரம் : 30 - வாய்மை*
*குறள்:292*
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
*மு.வ. உரை :*
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
*சாலமன் பாப்பையா உரை :*
குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
Comments
Post a Comment