Posts

Showing posts from February, 2021

கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்

🙏தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன்! பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?  துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான், கர்ணன்.   மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு! அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு, தேரேறிப் போய்விட்டான்.  இப்போது கர்ணனின் முறை! அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்! மிகச் சிறந்த வில்வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்! ’’குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால், நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால், நான் வீரனாவேன். ஆனால், அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே, நான் கொல்ல மாட்டேன் என்றானாம்! கர்ணன். கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல...

மனைவியின் சாமர்த்தியம்

*மனைவியின் சாமர்த்தியம்..!!* ஒரு ஏழை மனிதன் இருந்தான். அவனிடம் இரண்டே இரண்டு மாடுகள் மட்டும் இருந்தன. அதில் கிடைக்கும் பாலில்தான் அவனது வருமானம்.மனைவி, குழந்தைகளுடன் மிகவும் வறுமையில் வாடினான். ஒரு முறை அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று எல்லாரும் பேசிக் கொண்டனர். அவனும் தன்னுடைய நிலையை அவரிடம் கூறி ஏதாவது உதவி பெறலாம் என்று அவரிடம் போய் நிலைமையை சொன்னான். அவரும் ” இன்று முதல் உன் வாழ்க்கை உயரும்” என்று ஆசி கூறினார். அன்று முதல் மாடுகள் அதிகமான பாலைக் கொடுத்தன. எப்படி நடந்தது என்று தெரியாத படி வருமானம் பெருகியது. இரண்டு மாடுகள் நாலாகி , நான்கு எட்டாகி இப்போது அவனிடம் முப்பது மாடுகள். சிறிய கூரை வீடு பெரிய காரை வீடு ஆனது. திரும்பின இடமெல்லாம் செல்வச் செழிப்பு. நிற்கவும் நேரமில்லை. ஆண்டுகள் ஓடின. மீண்டும் அதே ஞானி அந்த ஊருக்கு வந்தார். தான் ஆசீர்வதித்த மனிதன் இன்று பெரிய செல்வந்தன் என்று கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவன் அவரைத் தேடி வருவான் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் குடியானவன் வரவில்லை. மனதில் அவருக்கு ஒரு ...

மனதை ஒரு நிலைப்படுத்தினால் இந்த உலகத்தை நாம் வென்று காட்டலாம்

*பயமறியான்..*             ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.. அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.. இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.. இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான்.. ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று புதைக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.. அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை புதைத்தார்கள்.. அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டு கத்தி அழுதான். சரி இவன் அழுது, அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.. மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.. அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில...