Posts

Showing posts from January, 2021

ஊசி விழும் சத்தம் கேட்குமா...?

ஊசி விழும் சத்தம் கேட்குமா...? 1) ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷா ஒரு முறை அகமதாபாத்தில் ஆங்கிலத்தில் பேச துவங்கினார். "குஜராத்தியில் பேசுங்கள்... நீங்கள் குஜராத்தியில் பேசினால் தான் கேட்போம்..." என்று கூச்சலிட்டனர் மக்கள்.  பேச்சை நிறுத்தி விட்டு தீர்க்கமாக மக்களைச் சுற்றிப் பார்த்தவாறே பதிலளித்தார் ஷா: "நண்பர்களே, என் நீண்ட பணிக்காலத்தில், பல போர்கள் புரிந்திருக்கிறேன்.  ராணுவத்தில் உள்ள ஸீக் ரெஜிமெண்ட் வீரர்களிடம் இருந்து பஞ்சாபி மொழியை கற்றிருக்கிறேன்; மராத்தி மொழியை, மராத்தா ரெஜிமெண்ட்டிடம்; மெட்ராஸ் ஸாப்பர்களிடம் தமிழ்; பெங்காலி ஸாப்பர்களிடம் பெங்காலி மொழி; ஏன்,... கூர்க்கா ரெஜிமேன்ட்டிடம் இருந்து நேப்பாளி மொழியைக் கூட கற்றிருக்கிறேன். துரதிஷ்டவசமாக,... குஜராத்தில் இருந்து ஒரு வீரர் கூட இல்லை,... எனக்கு குஜராத்தி மொழி கற்றுத்தர...!" -- (தொடர்ந்த நிசப்தத்தில்) ஊசி விழும் சப்தத்தை கேட்டிருக்க முடியும்.! 2) ஃபிரான்ஸ் நாட்டுக்கு விமானம் மூலம் வந்திறங்கிய 83 வயது அமெரிக்கர் ராபர்ட் வொய்ட்டிங், கஸ்டம்ஸ் அதிகாரியிடம் தன் பாஸ்போர்ட்டை துழாவி எடுத்துக் காட்ட சற்று நேரம் எடுத...

மகிழ்ச்சியை கொடுங்கள்

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂 *மகிழ்ச்சியை கொடுங்கள்..!!* பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர்  எல்லார் கையிலும்  பலூனை கொடுத்து தங்கள்  பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை  பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் குவியலாக  போட சொன்னார். இப்பொழுது அந்த  பேச்சாளர், உங்கள்  பெயர் எழுதிய பலூனை அந்த  அறைக்குள் இருந்து  எடுத்து வாருங்கள்  என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும்  விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக  எடுத்து தேடினர். ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு  கீழே விழுந்து  தங்கள் பெயருக்குரிய  பலூன் கிடைக்கிறதா  என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய  பலூனை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இப்பொழுது அந்த  பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு  பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ  அதை அந்த பெயர் உடைய நபரிடம்  கொடுங்கள்’ என்றார். அடுத்த ஒரே நிமடத்தில்  தங்கள் பெய...