Posts

Showing posts from September, 2020

நாம் யாரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்

*பாடம் கற்றுக் கொள்...* ஒரு ஊர்ல ஒரு அறிவாளி இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். ஒரு நாள், அவர் காட்டுக்குப் போகும் போது ஒரு நரியைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. அப்போது அவர் மனசுல ஒரு சந்தேகம்.  'இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியைப் போக்கி கொள்ள முடியும்..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார். இப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது. ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது. அதை சாப்பிட ஆரம்பித்தது. சாப்பிட்டது போக மீதியை அங்கேயே விட்டுட்டு சென்றுவிட்டது. புலி போனதை அறிந்து, கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து வந்து மிச்சமிருந்ததை சாப்பிட்டது. திருப்தியாக அங்கிருந்து அகன்றது. இதை கவனித்த அந்த மனிதன், ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ... தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. என்று எண்ணினான். அதுக்கப்புறம் அவர் காட்டுக்கே போறதில்லை. ஒவ்வொரு நாள...

நாவடக்கம்

_*நாவடக்கம்..*_ *என்னப்பா..! முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..?* என்றார் பண்டிதர்.. அவரும் .. *முடிவெட்ட நாலணா.. சவரம் பண்ண ஒரணா சாமி !* என்று பணிவுடன் கூறினார்..  பண்டிதர் சிரித்தபடியே, *அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு* என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் பண்டிதர்.. வயதில் _*பெரியவர்*_ என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..  வேலையை ஆரம்பித்தார் நாவிதர்.. _*நாவிதர் கோபப்படுவார்*_ என்று எதிர்பார்த்திருந்த பண்டிதருக்கு.. சற்று ஏமாற்றந்தான்.. பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்.. *ஏன்டாப்பா.. உன் வேலையோ..! முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம..* *உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி "நாவிதன்னு" சொல்றாங்க..?* இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் பண்டிதர்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை.. *நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான்..! நாங...

பயம்! பயம்! பயம்!

*பயம்! பயம்! பயம்!* ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார்.  சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன...

ரசித்தால் ருசிக்கும்

_*ரசித்தால் ருசிக்கும்..*_ ஒரு பெரிய குருவின் ஆசிரமத்தில் சீடன் ஒருவன் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தான்.. அவனின் சோகத்தைப் பார்த்த குரு சீடனிடம் *“நீ ஏன் மிகவும் சோர்வாகக் காணப்படுகிறாய்?”* என்று கேட்டார்.. அதற்கு சீடன் *“என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை”* என்று கூறினான்.. குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.. அங்கு பட்டாம் பூச்சிகள் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தன.. குரு சீடனிடம் *“இங்கு பறந்து திரிந்து கொண்டு இருக்கும் பட்டாம் பூச்சிகளில் ஒன்றை பிடித்து விட்டு வா”* என்று கூறினார்.. சீடனும் குருவின் ஆணைப் படி பட்டாம் பூச்சிகளைப் பிடிக்க ஓடினான்.. ஆனால் சீடனால் பட்டாம் பூச்சிகளில் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.. சோர்ந்து களைப்புடன் திரும்பிய சீடனைப் பார்த்து *“பரவாயில்லை வா. நாம் தோட்டத்தின் அழகினைப் பார்த்து ரசிக்கலாம்”* என்று கூறினார்.. பின் சீடனை தோட்டத்தின் மையப் பகுதிக்கு அழைத்து வந்தார்.. அங்கு இருவரும் தோட்டத்தின் அழகினை கண் குளிரப் பார்த்துக் கொண்டிருந்தனர்.. சிறிது நேரத்தில் தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த பட்டாம் பூச்சிகள் அவர்களையும் சுற்றத் தொடங்கின.. ச...

நெருக்கடி

*நெருக்கடி..!!* உலகில் உள்ள பெரிய பெரிய நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டுக்கு அருகில் உள்ள குட்டி குட்டி தீவுகள் மீது போர் தொடுத்து அவற்றை ஆக்கிரமிக்க தொடங்கிய காலகட்டம்! ஒரு கப்பலில் 500 வீரர்களை அனுப்பி 500 பேர் மக்கள் தொகை கொண்ட ஆதிவாசிகள் வாழ்கின்ற ஒரு தீவை கைப்பற்ற அனுப்பினார்கள். கப்பல் தீவை சென்றடைந்தது, சில நாட்களில் திரும்பி வந்தது, 500 வீரர்களும் கை கால் உடைந்த நிலையில் தோற்றுப் போய் திரும்பி வந்தார்கள், ஆதிவாசிகள் பின்னி எடுத்து விட்டார்கள், அடுத்த நாள் 1000 வீரர்களை கப்பலில் அனுப்பினார்கள். 1000 வீரர்களும் கை கால் இழந்த நிலையில் பயந்து ஓடி வந்தார்கள், மீண்டும் 2000 பேரை அனுப்பினார்கள். அவர்களுக்கும் அதே கதி தான், பின் 5000 பேர்! அவர்களுக்கும் அதே கதி! இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. வெறும் 500 ஆதிவாசிகள் ஆயுதங்களுடன் சென்ற 5000 பேரையும் தோற்கடித்து கை கால்களை உடைத்து திருப்பி அனுப்பி விட்டார்களே. எப்படி முடிந்தது என்று தீவிரமாக யோசித்தார்கள். பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள், இந்த முறை வெறும் 500 பேரை மட்டுமே கப்பலில் அனுப்பினார்கள் இரண்டு நாள் நடந்த தீவிரச் சண்டையில் ஆதிவாசிகளை...

மயங்காதே

 *மயங்காதே*  கன்றுக்குட்டி ஒன்று அழுதபடியே தாய்ப்பசுவிடம் ஓடி வந்தது.  அதைப் பார்த்த தாய்ப்பசு தனது கன்றை நாக்கினால் நக்கியபடி அதன் அழுகைக்கான காரணத்தை விசாரித்தது. உடனே அந்த கன்று, "அம்மா, இந்த வீட்டில் என்னைப் போலவே ஆட்டுக்குட்டி ஒன்றும் உள்ளது. என் அழகு அதற்கு இல்லை. கன்னங்கரேலென்று மிகவும் கருப்பாக உள்ளது. என் சுறுசுறுப்பும் அதற்கு இல்லை. ஆனால் இந்த வீட்டில் இருக்கும் முதலாளியின் மகன் என் மீது அன்பு காட்டுவது இல்லை. ஆனால் அந்த ஆட்டுக்குட்டியிடம் மட்டும் விளையாடுகிறான். அதற்கு பசுமையான புல் தருகிறான். அதன் கழுத்தில் அழகான மணி ஒன்று கட்டி அழகு படுத்துகிறான். ஆனால் என்னுடைய நிலையைப் பார். இங்கே கிடக்கும் காய்ந்த வைக்கோலைத்தான் தின்ன வேண்டியிருக்கிறது. என்னிடம் என்னம்மா குறை இருக்கிறது? " என்றபடி மீண்டும் அழத் தொடங்கியது. "கண்ணே, இதற்காகவா வருத்தப்பட்டு அழுகிறாய்? அதிகமான மரியாதையும், அதிகமான இன்பத்தையும் அனுபவிப்பது மிக்வும் ஆபத்தானது. பிறருக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்த்துப் பொறாமைப் படாதே, அந்த ஆடு பெறும் நலமும் வளமும் அதன் அழிவிற்கே. அதன் நிலையைக் கண்டு இரக்கப்பட...

கொட்டிக்கிடக்கு

_*கொட்டிக்கிடக்கு..*_ ஒருவன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. அப்போது எதிரில் உள்ள  குப்பைத் தொட்டியில் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார்.. சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைத் தொட்டியில் தனக்குத் தேவையான  பாட்டில்களை நிரப்பி எடுத்துச் சென்றார்.. மீண்டும் ஒருவர் தனக்குத் தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பிச் சென்றார்.. அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுச் சென்றது.. கடைசியாக வந்த ஒரு பசு குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கிக் கொண்டது.. இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த அந்த நபர் கூறிய வார்த்தைகள் , *ஒரு சிறிய குப்பைத் தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து, விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம் என்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டு இனி தனக்கு தோல்வியே கிடையாது, இனி வரும...

கடைசி இலை

*கடைசி* *இலை*  இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான். அவன் மனதில் அணுவளவு கூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டு விட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். அவனது அறையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது. அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான். மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன. அந்தக் கடைசி இலை விழும் போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக்கொண்டே வருகிறான். செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை. நாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான். பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.! இதைக்கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது. நம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒற்றை இலைபோ...

மறப்போம் மன்னிபோம்

*மறப்போம் மன்னிபோம்..!!* ஒரு ஊரில் இரண்டு உயிர் நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.ஒரு நாள் அவர்கள் இருவரும் பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, இருவருக்கும் ஒரு விஷயத்தில் வாய்ச் சண்டை ஏற்பட்டது. அப்போது ஒருவன் நண்பனின் கன்னத்தில் அறைந்து விட்டான். ஆனால், அறை வாங்கியவன் அதற்கு கோபப்படாமல், அமைதியாக இருந்தான். பின் சற்று தூரம் சென்று அமர்ந்து மணலில் “இன்று என் உயிர் நண்பன் என்னை அறைந்து விட்டான்” என்று எழுதினான். ஆனால், அது மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று தூரம் மறுபடியும் இருவரும் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு தண்ணீர் ஊற்று இருப்பதை இருவரும் கண்டனர். நடந்ததை மறந்து அவர்கள் இருவரும் தண்ணீரை பருகினர். அப்போது அறை வாங்கியவனின் காலை யாரோ இழுப்பது போன்று இருந்ததது. பார்த்தால் அவன் புதைக்குழிக்குள் சிக்கிக் கொண்டான். அதைக் கண்ட மற்றொருவன் என்ன செய்வதென்று தெரியாமல், கஷ்டப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின் அவனை மேலே தூக்கி விட்டான். மேலே வந்ததும். அவன் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்தான், பின் அங்கு இருக்கும் ஒரு சிறு கல்லை எடுத்து, அந்...

அப்பா மாறவேயில்லை

*அப்பா மாறவேயில்லை* பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்-இன்ஜினியரிங் முடித்து விட்டு-பணிக்காக சென்னைக்கு வந்தேன். எனக்கு வேலை கிடைத்த புதிதில்--நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம்--8000 ரூபாய்.அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும்.அப்படி முதல் மாதச் சம்பளம் பேங்கில் போடப்பட்டதும், தலைகால் புரியவில்லை வீட்டிற்கு போன் செய்தேன், அப்பா தான் எடுத்தார்.அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை. மெல்லியதாக குசலம் மட்டும் விசாரித்து விட்டு, "உங்களுக்கு எதாச்சும் வேணுமா" அப்பா பதில் சொல்லவில்லை."அம்மாட்ட பேசு.. "என்றவாறே போனை அம்மாவிடம் தந்து விட்டார். நானும் அம்மாவிடம், " பாத்தியா நான் என்னமாச்சும் வேணுமான்னு அப்பாட்ட கேக்கேன், பதிலே சொல்லல..இவரெல்லாம்..." என்று துவங்கி அப்பாவை சிறிது வசை பாடிவிட்டு,மற்ற கதைகளை--அந்தக் கதைகளை எழுபத்தியெட்டு முறை அம்மாவிடமே சொல்லியிருந்தாலும்--எழுபத்தி ஒம்பதாவது முறையும் முதல் தடவை போல கேட்பாள் அம்மா--பேசிவிட்டு போனை வைத்துவிட்டேன். ஓரிரு நாட்கள் கழித்து-என் வங்கிக் கணக்கை எதேச்சையாகப் பார்த்தேன்.அந்த அக்கவுண்ட் என் கல்லூரி காலத்தில் ...

காக்கையின் நட்பு

 காக்கையின் நட்பு அர்சனாவுக்கு வயது ஒன்றரை, அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு, சோறூட்ட முற்றத்திற்கு வந்தாள் அவளது அம்மா சாந்தி. சோற்றுடன் வந்ததும் முற்றத்தில் நின்ற மரத்தில் ஏராளமான காகங்கள் கூடிவிட்டன. காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டுவாள் சாந்தி. ஆனால் காக்காவுக்கு சோறு போடுவதில்லை. அப்போது குக்கர் விசில் சத்தம் கேட்கவே, அர்ச்சனாவை கிழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடினாள் சாந்தி. அர்ச்சனாவின் அழகுக் கண்கள் சிரிக்கும், தளிர்நடையால் அவள் நடக்கும் அழகோ தனி. அம்மா உள்ளே போனதும், அர்ச்சனா கண்ணால் சிரித்தபடி தளிர்நடை நடந்தபடி, சோற்றை அள்ளி காக்காவை நோக்கி நீட்டினாள். காகங்கள் அவளை நெருங்கி வர, “காக்கா இந்த... காக்கா இந்தா...” என்று சோறு போட்டாள்.  உள்ளே சென்ற சாந்தி திரும்பி வர, கையால் ஒரு அடி அடித்தாள் அர்ச்சனாவை... “அரிசி விக்கிற விலைக்கு இதுகளுக்கு சமைச்சி சோறு போடணுமாக்கும். உன் சாப்பாட்டை காக்காவுக்கு தியானம் பண்றியா?” என்று முணுமுணுத்தபடியே கையை ஓங்கி காக்கைகளை விரட்டினாள் சாந்தி. அர்ச்சனாவுக்கு நாய், பூனை, காக்கா, எறும்பு எல்லோருமே நண்பர்கள்தான். கையில் என்ன பண்டம...

முளையிலேயே கிள்ளவேண்டும்

 முளையிலேயே கிள்ளவேண்டும்  குருவும் சீடர்களும் காட்டு வழியே பயணம் செய்தனர். அப்போது குரு தன் சீடர் ஒருவரிடம் அதோ அந்த செடியை பிடுங்கு என்றார். சீடர் உடனே பிடிங்கி எறிந்தார். சிறிது தொலைவு சென்றதும், முன்பை விட சற்று பெரிய செடியை காட்டி அதை பிடுங்கு என்றார் குரு. மற்றொறு சீடர் வெடுக்கென பிடிங்கி எறிந்தார். கொஞ்ச தூரம் குருவும் சீடர்களும் நடந்தனர். இப்போது குரு ஒரு சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த செடியை காட்டி பிடுங்கு என்றார். முதலாமவர் முயன்றார் முடியவில்லை. மற்றொறு சீடர் முயன்றார், முடியவில்லை,  இப்படியே எல்லா சீடர்களும் முயன்று முடியவில்லை. எங்களால் முடியவில்லை என்றனர். குரு சொன்னார்-பிரச்சினைகளும் இந்த செடியை போல தான் என்று. புரியாத சீடர் ஒருவர் , அது எப்படி செடியும் பிரச்சினையும் ஒன்றாகும் குரு என்றார். சிரித்தபடியே , சிறிய செடியை உங்களால் பிடுங்க முடிந்தது . ஆனால் சற்றே பெரியதான செடியை பிடுங்க முடியவில்லை.  அது போல பிரச்சினைகள் சிறியதாக இருக்கும் போதே தீர்த்துவிடலாம் , வளரவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது என்றார்.

தொப்பி

 தொப்பி சின்ன வயசில் படித்த தொப்பி வியாபாரியும் குரங்குகளும் கதையின் புதிய வடிவம் இது.. தலைமுறைகள் கடந்து போக, அதே சரித்திரம் திரும்புகிறது.. தொப்பி வியாபாரியின் எள்ளுப் பேரன் ஒருவன், தாத்தாவைப் போலவே தொப்பி வியாபாரம் செய்கிறான்.. வியாபாரத்துக்காக வெளியூர் சென்றபோது, நிழலுக்காக தாத்தா ஒதுங் கிய அதே மரத்தின் கீழ் இவனும் ஒதுங்க வேண்டிவருகிறது.. தாத்தா போலவே தூங்கியும் விடுகிறான்.. தாத்தா காலத்தைப் போலவே மரத்தின் மேலிருக்கும் குரங்குகள் இறங்கி வந்து அவனது கூடையிலிருந்த தொப்பிகளையெல்லாம் தூக்கிக்கொண்டு போய் விடுகின்றன.. தூக்கம் கலைந்தவன், தன் தொப்பிகள் பறிபோனதைப் பார்க்கிறான்.. ஆனால், தான் கேள்விப்பட்டிருந்த தாத்தா கதை நினைவுக்கு வர, உள்ளூர ஒரு தெம்பு வருகிறது.. தாத்தா காலத்து வித்தை பலிக்கிறதா? என்று பார்க்க, குரங்குகளைப் பார்த்தபடி தன் தலையை தேய்க்கிறான்.. என்ன ஆச்சரியம், மரத்திலிருந்த குரங்குகளும் அப்படியே தலையைத் தேய்த்தன.. இனி பிரச்னை இல்லை என்று உற்சாகமானவன் தன் தலையிலிருந்த தொப்பியை எடுத்துக் கீழே வீசினான்.. குரங்குகளும் அந்த தொப்பிகளை வீசும் என்று எதிர்பார்த்தால்.. ம்ஹம்.. குரங...

மன அமைதி

 மன அமைதி  அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.  வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாக இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை வீட்டுக் காரனான வேட்டைக் காரனைச் சந்தித்து அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன,காயப் படுத்துகின்றன என்றான்.  வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது. ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக் குட்டிகளைக் கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி. வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒண்ணும் செய்யமுடியாது. உன்னால முடிஞ...

அணுகுதல்

 அணுகுதல்  கெளதமர் தனது சீடர்களை ஊர் ஊராக உபதேசங்களுக்கு அனுப்பினார். அதில் காஷ்யபருக்கு மட்டும் எங்கு செல்வது என்று சொல்லப் படவில்லை.  காஷ்யபர் நேரடியாய் கெளதமரிடமே சென்று கேட்டார், "நான் எங்கு செல்லட்டும்..?"  புத்தர் சிரித்தபடி, "நீயே தேர்வு செய்.!" ஒரு கிராமத்துக்கு தான் செல்ல விரும்புவதாக சொன்னார். சீடனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டவராய் கேட்டார், "அந்தப் பகுதிக்கா..? அங்கே வாழும் மனிதர்கள் மிகவும் முரடர்கள். கொஞ்சம் கூட பக்தியோ, தியான உணர்வோ இல்லாதவர்கள். இப்படி பொல்லாதவர்களிடமா போக விரும்புகிறாய்..?" "ஆமாம்!" என்றார் காஷ்யபர். "உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்க விரும்புகின்றேன். இந்த மூன்று கேள்விக்கும் சரியான பதில் சொல்லிவிட்டால் நீ போகலாம், அங்கே சென்ற பிறகு உன்னை வரவேற்பதற்கு பதில் அவமானப்படுத்தினால் என்ன செய்வாய்..?" என்று கேட்டார் கெளதமர். "மிகவும் மகிழ்ச்சியடைவேன்.., ஏனென்றால், அவர்கள் என்னை அடிக்கவில்லை என்று. அவமரியாதையோடு நிறுத்திக் கொண்டார்களே, என்று நன்றி சொல்வேன்.!" "ஒருவேளை அடித்தால் என்ன செய்வாய்..?...

முதலில் பேசுவது

 முதலில் பேசுவது  ஒரு முதலாளி தனது கம்பெனியின் இரண்டு தொழிலாளர்களோடு பிக்னிக் போனார். போன இடத்தில் எதிர்பாராதபடி அவர்களது எதிரில் ஒரு தேவதை தோன்றி, ''ஆளுக்கொரு வரம் தருகிறேன். கேளுங்கள்!'' என்றது. தொழிலாளர்களுக்குப் பரம ஆனந்தம். உச்சகட்ட பரவசத்தில், ''நான் உடனே சுவிட்சர்லாந்துல இருக்கணும்!'' என்று முந்திக்கொண்டு கேட்டார் ஒருவர்.  தேவதை அருள்பாலிக்கவும், அடுத்த விநாடி.. அவர் சுவிட்சர்லாந்தில்! துடித்துக்கொண்டிருந்த இன்னொருவர், ''லாஸ்வேகாஸ் சூதாட்ட அரங்கில் நான் உல்லாசமாக இருக்க வேண்டும்'' என்று கேட்க, அவருக்கும் வரம் தரப்பட்டது. பொறுமையாக நின்றிருந்த முதலாளியைத் தேவதை பார்க்க, ''அந்த ரெண்டு பேரும் உடனே இங்கே இருக்கணும்'' என்றார். நீதி: எப்பவுமே முதலாளியைத்தான் முதல்ல பேசவிடணும்.

இரண்டு கண்கள் வேண்டும்

 இரண்டு கண்கள் வேண்டும்  ஒரு வர்மக்கலை வல்லுனரிடம் வர்மம் கற்றுக்கொள்ள ஒருவன் விரும்பினான். மிக வேகமாக அக்கலையைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டான்.  ‘‘ஐயா, இக்கலையை கற்றுக்கொள்ள முழுமையாக எத்தனை வருடங்கள் ஆகும்?” “பத்து வருடங்கள் ஆகும்” ‘‘நான் வார இறுதியில் ஓய்வு எதுவும் எடுக்காமல் பயிற்சி செய்து கற்றுக்கொண்டால் எவ்வளவு காலம் ஆகும்?” “இருபது வருடங்கள்.” ‘‘உணவு உண்ணும் நேரத்தை தவிர அனைத்து நேரத்திலும் உழைத்துக் கற்றால்?” ‘‘அப்போது முப்பது வருடங்கள் ஆகும்” “ஐயா, நான் உழைப்பை அதிகரிக்க அதிகரிக்க கற்கும் நாளை பத்து பத்து வருடங்கள் அதிகரித்துக் கொண்டு செல்கிறீர்களே?” ‘‘இக்கலையைக் கற்க இரண்டு கண்கள் தேவை.  உன்னுடைய ஒரு கண் ‘எப்படி சீக்கிரம் கற்றுக்கொள்வது’ என்பதிலேயே கவனமாக இருப்பதால், மீதம் இருக்கும் ஒரு கண்ணை வைத்து கலையின் முறைகளை கற்க நேரமாகத்தானே செய்யும்’’ என்றார் ஆசான். எதையும் கற்கும்போது ‘எவ்வளவு சீக்கிரம் முடிப்போம்’ என்ற எண்ணம் இருக்கக்கூடாது. அதை ஒழுங்காக முறைப்படி எப்படி கற்கவேண்டும் என்ற எண்ணம்தான் இருக்க வேண்டும் என்ற படிப்பினையைப் பெற்று ஆசானை அவன் வணங்கினான்.

அமைதி

 அமைதி  நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான் மன்னன். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான் அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா. இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டி...

சுவை என்பது நாக்கில் மட்டுமல்ல மனதிலும் இருக்கிறது

*தினம்* *ஒரு* *கதை*  ரெஸ்ட்டாரண்ட்டில் தன் எதிரில் வந்து அமர்ந்தவளின் அழகில் மயங்கினான் அவன். இதயம் துடிக்க, கைகால்கள் படபடக்க.. உணர்ச்சிமயமாக இருந்தவனுக்கு.. பேச்சும் வர வில்லை. சர்வரை அழைத்து, 'காபிக்கு கொஞ்சம் சர்க்கரை கொண்டுவா' என்று சொல்ல நினைத்தவன், நாக்கு குழறி 'கொஞ்சம் உப்பு கொண்டு வா' என்றான். சர்வர் திகைத்தார். வார்த்தை தவறியது மறு விநாடியே அவனுக்குப் புரிந்து விட்டது என்றாலும் அழகியின் எதிரில் தன் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள, 'ஆமா.. உப்புதான் கேட்டேன். கொண்டு வா!'' என்றான் சர்வரிடம். அழகிக்கு ஆச்சரியம். காபியில் உப்பு போட்டு சாப்பிடுவதா? விசாரித்தாள்.  அவனோ உடனடி கதை ஒன்றை அவிழ்த்துவிட்டான்.  ''கடலோர மீனவ கிராமம் ஒன்றில் பிறந்தவன் நான். இப்ப டவுன்ல வசதியா இருந்தாலும் அப்பாவும் அம்மாவும் அந்தக் கிராமத்தை விட்டு வரமாட்டேங்கிறாங்க. அவங்க நினைப்பும் ஊரு நினைப்பும் என்னைவிட்டுப் போயிடக் கூடாதுங்கிறதால காபியில உப்பு போட்டுக்கறேன்!'' அவனது பெற்றோர் பாசமும் ஊர் பற்றுதலும் அவளை ஈர்த்தது. அடுத்தடுத்து அவளே வந்து வலிய சந்தித்ததில் காதல் வளர்ந்த...

நிபந்தனையற்ற அன்பு

*நிபந்தனையற்ற* *அன்பு*  ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். கதவைத் திறந்த இளம்பெண், தேவதையாகவே காட்சியளித்தாள். அவளிடம் சாப்பாடு கேட்கமனமில்லாமல், “கொ… கொஞ்…கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான். அவனை ஏற இறங்கப் பார்த்த அவள், அவன் கடும்பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள். உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள்.  பாலை மெதுவாகக் குடித்து முடித்தான். “நான் எவ்வளவு காசு கொடுக்கணும்?” என்றான். “நீங்க எதையும் தர வேண்டாம். ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும்போது, அதற்கு பதிலா எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்றாள் கனிவுடன். பின்னாளில் அவன் பெரிய மருத்துவ நிபுணன் ஆனான், அவன் பணி புரிந்த அதே மருத்துவமனையில் , பசியால் வாடிய போது பால் தந்தவள் நோயாளியாக அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவள் யார் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மருத்துவர் அன்றிலிருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக் கொண்டார். பெரும் போராட்டத்திற்குப் பின் அவள் பூரணமாகக் குணமடைந்தாள். அந்த ஏழைத் தாய் தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ பில்லைப் பார்த்...

செவிடாய் இரு

  *செவிடாய்* *இரு*  சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தைக் காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தைத் தொட வேண்டும். அது தான் போட்டியின் விதி.  முதலில் தொடுபவர் தான் வெற்றியாளர். போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கிக் கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியைத் தொடவே முடியாது! இது சாத்தியமே இல்லை” எனக் கூறினார். கூட்டத்திலிருந்து இப்படியாக கோஷங்கள் வந்த வண்ணமே இருந்தன. மெல்ல ஒவ்வொரு தவளையாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து, போட்டியிலிருந்து விலகிக் கொண்டன. “இதில் எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” கூடியிருந்தோர் தங்கள் கோஷங்களைத் தொடர்ந்து கொண்டேயிருந்தனர். இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்...

பார்வை குறைபாடு

*தினம்* *ஒரு* *கதை*          *பார்வை* *குறைபாடு*  புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.  அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது.  அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா. ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல. பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு. திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.  அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல.  இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்ன...

அச்சம்

   *அச்சம்*  அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார். “என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.  அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார் . மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது. மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.  அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார், “அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.” நீதி: *அச்சமின்மையே* *ஆரோக்கியம்* !  

ஒன்றி இருத்தல்

ஒன்றி_* *_இருத்தல்_*  ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று கேட்டார்?”. குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”.  சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள்.  நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள்.  ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன்.  “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.  செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லா...

நீங்கள் எப்படி?

 *நீங்கள்* *எப்படி*   ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு "வால்" கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இது தான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், "வாள்... வாள்" என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு... இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போக வேண்டிய திசை வேற...