Posts

Showing posts from October, 2023

எண்ணங்களே தீர்மானிக்கின்றன

 ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்சி  போனாங்க.  ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க. அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"  ன்னு சொன்னார். மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும். ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு.  வாந்தி வருதான்னு  பாக்கலாம். வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி. ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு. அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும் ன்னு. ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது. ...

நண்பனா? எதிரியா? முடிவு செய்

 நண்பனா? எதிரியா? முடிவு செய் சிறு கதை அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.  வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.  வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது. ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி. வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியா...