ஒன்றுபட்ட முழு மனதுடன்
.......................................................... *''ஒன்றுபட்ட முழு மனதுடன்...!"* ........................................................ வாழ்வில் வெற்றி பெறுவதன் மறைபொருள்(இரகசியம்) என்ன...? வாழ்க்கையை மனத் திண்மையோடு அதன் போக்கில் எதிர்கொள்ளுதலே வாழ்வில் மறைந்திருக்கும் மறைபொருளும் அதைத் தொடர்ந்து வரும் வெற்றியும்... நாளும் நாம் செய்யும் நம் வேலைகளில் எது முதன்மையானது...? எது அதன் பின் வருவது...? என்று வரிசைப்படுத்தி நம் மனதைக் குவித்து ஈடுபட பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்... இது நடக்குமோ?, நடக்காதோ! என்கிற எதிர்மறை எண்ணங்களை அறவே ஒதுக்கித் தள்ளி நம்பிக்கையுடன் கற்றுக்கொள்ள வேண்டும்... இது தொடர்பாக ஒரு கதை இதோ... கருவுற்றிருந்த மான் ஒன்று பிரசவிப்பதற்குத் தகுந்த இடம் ஒன்றைத் தேடி அலைந்து, ஒரு நதிக் கரையில் அடர்ந்த புல்வெளியொன்றைத் தேர்ந்தெடுத்தது... அது பாதுகாப்பான இடமாக அதற்குத் தோன்றியது. அங்கு வந்து சேர்ந்ததும் அதற்குப் பிரசவ வலியும் ஆரம்பித்து விட்டது... வலியினூடே அக்கம் பக்கம் நோட்டம் விட்டது... இடதுபக்கம் ஒரு வேடன் கையில் வில் அம்புடன் மானைக் குறி பார்...