சமயோசிதப் புத்தி
*🧿'சமயோசித புத்தி."* *🏵️❀❀••┈┈•®️•┈┈••❀❀🏵️* *♻️ஒரு மனிதனுக்கு அறிவுக் கூர்மை இருக்கின்றதோ, இல்லையோ ஆனால், சமயோசிதம் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும்.* *♻️அறிவுக் கூர்மையால் கூட சில செயல்களை சாதிக்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது. ஆனால், சமயோசிதப் பண்பால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.* *♻️சிலர் தன்னுடன் ஒத்த சூழ்நிலையில் இருந்து விலகி இருப்பவர்களையும் தனது சமயோசித புத்தியினால் சூழ்நிலைக்குள் கொண்டு வரும் திறமையினைப் பெற்றிருப்பார்கள்.* *♻️இத்திறமை இயல்பாகச் சிலருக்கு அமைந்திருக்கும், சிலர் தங்களது சுயமுயற்சியின் மூலமாக இதனை வளர்த்து இருப்பார்கள்.* *♻️பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள அவரால் முடியவில்லை.* *♻️அக்பரின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது.* *♻️நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.* *♻️ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார்.* *அவருடன் ம...