Posts

Showing posts from May, 2025

நம் உறவின் இழைகளை அறுந்து விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்

 *வாசித்ததில் விரும்பியது*   ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள்.  ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக்கல் பதித்த நெக்லசை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்..., மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம்  தரும்படி கேள் என்றாள். மகன் அந்த நெக்லசை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான். அவனது மாமா அந்த நெக்லசை முற்றிலுமாகப் பார்த்தார். அவனிடம் கூறினார்... என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று... பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம்  கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக் கொள் என்றார். எனவே, அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான...