Posts

Showing posts from January, 2025

வாழ்க்கை உங்கள் மீது மண்ணை/துன்பத்தை வீசலாம்

 ஒரு நாள் ஒரு விவசாயியின் கழுதை கிணற்றில் விழுந்து விட்டது.  அம்மிருகம் மணிக்கணக்கில் சத்தமாக கத்திக்கொண்டே இருந்தது, விவசாயி அதை வெளியேற்றுவதற்கு ஏதாவது செய்ய முயன்றார். எதுவும் பலனளிக்கவில்லை. கடைசியாக, கழுதைக்கு வயதாகிவிட்டதாலும், ஏற்கனவே கிணறு வறண்டுவிட்டதாலும், எப்படியும் கிணறு மூடப்பட வேண்டும்.. அதை இப்போதே நடத்திவிட விவசாயி முடிவு செய்தார்;  உண்மையில் கழுதையை கிணற்றில் இருந்து வெளியே இழுப்பது அவ்வளவு மதிப்புக்குரியதாகவும் இல்லை... அக்கம்பக்கத்தினர் அனைவரையும் உதவிக்கு வருமாறு அழைத்தார்.  அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மண்வெட்டியைப் பிடித்து கிணற்றில் மண்ணை வீசத் தொடங்கினர். கழுதை என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து பயங்கரமாக கத்தியது.  பின்னர், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சில மண்வெட்டிகளுக்குப் பிறகு அது அமைதியாகிவிட்டது. கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது விவசாயி, அவன் பார்த்ததைக் கண்டு வியந்தான்... ஒவ்வொரு மண்வெட்டி மண்ணிற்கும், கழுதை நம்பமுடியாத ஒன்றைச் செய்து கொண்டிருந்தது: அது தன்மீது விழும் மண்ணை உதறி அசைத்து, மண்ணின் மேல் நின்று கொண்டிருந்தது. மிக விர...

மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மனிதர்களை குறைக்கூறாதீர்கள்

 *குட்டி கதை - துன்பம்* பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை ஜன்னல் அருகில். இன்னொருவருக்கு ஜன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமை.. தனிமை... தனிமை...! ஜன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒரு முறை எலும்பு நோயாளி ஜன்னல் நோயாளியிடம் சொன்னார். உனக்காவது பொழுது போக்க, ஒரு ஜன்னல் இருக்கிறது, எனக்கு அதுகூட இல்லை..! கவலைப்படாதே நண்பா.., நான் ஜன்னல் வழியாக என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..! அன்று முதல் ஜன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார். நண்பா.. ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி, நடுவில் சிறு தீவு, ஏரியில் படகுகள் மிதக்கின்றன. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..! எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்... ஜன...