Posts

Showing posts from March, 2025

ஏழு இடத்தில் வாயை திறக்காதீர்கள்

 இந்த ஏழு இடத்தில் வாயை திறக்காதீர்கள்... 1, நீங்கள் கோபமாக இருக்கும்போது வாயை திறக்காதீர்கள் ஒரு மனிதன் கோபத்தில் இருக்கும் போது மிருகமாக நடந்து கொள்வான் .அந்த நேரத்தில் நண்பன் யார் எதிரி யார் என்று அவனுக்கு தெரியாது... அந்த நேரத்தில் அவன் எதை வேண்டுமானாலும் செய்வான்.. 2, நீங்கள் அழும் போது அமைதியாக இருங்கள்.. அழுது கொண்டே இருக்கும் போது உங்கள் பலவீனத்தை சொல்லி விடுவீர்கள்.. உங்களுடைய பலவீனம் தெரிந்து விட்டால் உங்களை யார் வேண்டுமானாலும் ஈசியாக கண்ட்ரோல் பண்ண முடியும்.. 3, எல்லோரும் சத்தம் போட்டு கத்தும் போது நீங்கள் வாயை திறக்காதீர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் மீன் கூட தூண்டிலிருந்து தப்பித்துக்கொள்ளும்.. 4, நீங்கள் எந்த இடத்தில் ஏமாற்றப்பட்டீர்களோ அந்த இடத்தில் அமைதியாக இருங்கள்.. ஏன் எதற்கு என்று விளக்கம் கேட்டால் அதற்கு பல காரணம் சொல்வார்கள் அதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது... 5, பொது இடத்தில் இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் வாய் திறக்காதீர்கள் அப்படி வாயைத் திறந்தீர்கள் என்றால் சண்டையை உங்கள் பக்கம் திருப்பி விடுவார்கள் நீங்க மன உளைச்சலுக்கு ஆளாக...

என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான்

 ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர். அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான். ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும், கவனமும் செலுத்தினார்.   சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான்.   ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவ...

ஒரு சிறு, எளிய வேலை அம்மா

 பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்கு புறப்பட்டார். பிளாட்பார பெஞ்சில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி உட்கார்ந்து இருப்பதை பார்த்தார். அருகில் சென்று கேட்டார்: "நீங்கள் எந்த ஊருக்கு செல்லவேண்டும்?" -- "நான் டெல்லிக்கு எனது மகனை பார்க்க செல்கிறேன்" "அம்மா - இனிமேல் எந்த வண்டியும் கிடையாது; கடைசி ரயிலும் கொஞ்ச நேரம் முன்பு தான் சென்றது.." பெண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை; கவலையுடன் பார்த்தார்... அந்த போர்ட்டர் கொஞ்சம் கரிசனத்தோடு, பெண்மணியை பயணிகளின் அறைக்கு அழைத்து சென்றார். அங்கே இரவை கழிக்கலாம் என்றார். "உங்கள் மகன் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?" -- எனது மகன் இரயில்வே துறையில் வேலை செய்கிறான் "அவரது பெயரை சொல்லுங்கள்; தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்..." -- அவன் எனது லால்; எல்லோரும் லால் பகதூர் சாஸ்திரி (அப்போது அவர் ரயில் துறை அமைச்சர்) என்று அழைப்பார்கள்.. மொத்த ஸ்டேஷனும் புரண்டது; எல்லோரும் சேர்ந்து அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்தனர்... அதை பார்த்து, அந்த...

நாம் பிறருக்கு என்ன கொடுக்கிறோமோ அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்!

 நாம் பிறருக்கு என்ன கொடுக்கிறோமோ அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும்! 🏵️ நாம் மற்றவர்களிடம் மரியாதையாகவும், பணிவாகவும் நடந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். பிறரை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதே நம் குணத்தை வெளிக்காட்டுகிறது. ஆகவே, நாம் அடுத்தவர்களுக்கு கொடுப்பது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அதுவே நம்மிடம் திரும்ப வரும் என்பதை மறக்க வேண்டாம். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம். ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சி கடையிருந்தது. அந்த கடையின் முதலாளி தினமும் கடையை சரியாக மூடப்போகும் சமயம் ஒரு நபர் வந்து, ‘முதலாளி மூளையிருக்கிறதா?' என்று கேட்பார். அதற்கு முதலாளி ‘மூளையில்லை’ என்று சொன்னதும், ‘என்ன முதலாளி இன்னைக்கும் உங்களிடம் மூளையில்லையா?’ என்று நக்கலாக சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றுவிடுவார். இப்படி தினமும் நடந்துக் கொண்டிருந்தது. இது அந்த முதலாளிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. இதைப்பற்றி அவர் நண்பரிடம் கூறினார் அந்த முதலாளி. இதைக் கேள்விப்பட்ட அவருடைய நண்பர் ஒருநாள் கடைக்கு வந்தார். வழக்கம்போல அந்த நபர் வந்து, ‘முதலாளியிடம் மூளையிருக்கா?’ என்...

நீ நீயாகவே "மனிதனாகவே இரு"

 ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!  சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!  காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு... கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்..... அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!  உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் சந்திரன் ! ஒருவர் சூரியன் ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....! சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று செல்வம்! இரண்டு இளமை! இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்! சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! .... உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்...! ஒன்று பூமி ! எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித...

ஊதும் சங்கை ஊதி வைப்போம் விடியும் போது விடியட்டும்

 "ஊதும் சங்கை ஊதி வைப்போம் விடியும் போது விடியட்டும்" 240 04/ 12 / 24 ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார். கடனுக்குப் பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர். மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார். அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார். அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார். ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், “ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்,” என்று கேட்டார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன். கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன். பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த அவனின் நண்பன் ஒ...

எதிர்பார்ப்பு... ஏமாற்றம் தரும்

 "எதிர்பார்ப்பு... ஏமாற்றம் தரும்...!" இன்றைய காலச்சூழலில் வாழ்க்கை என்பது பலவிதமான எதிர்பார்ப்புகளோடு இயங்கிக் கொண்டு இருக்கிறது...  “என்னால் எல்லாம் முடியும். எனக்கு எல்லாம் வேண்டும்“  என்ற சிந்தனையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளத்தையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது... ஆனால்!, பொருள் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் கூட முதுமையின் போது இயலாமையால் தவிக்கிறார்கள்... அந்த நேரத்தில், வாழ்வில் பெற்ற அனைத்து நலன்களும் வீண் என்றே அவர்கள் கருதுகின்றனர். இதே சிந்தனையை உள்வாங்கி வாழ்வை நகர்த்தினால் நாம் இயல்பாக வாழ முடியும்... தன் வாழ்வில் நான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்ற புலம்பலோடு இளைஞன் ஒருவர் துறவியை தேடிச் செல்கிறான்.  அவரை பார்த்ததும் தன் அனைத்து குறைகளையும் கொட்டித் தீர்க்கிறான். சில நிமிட மவுனத்துக்கு பிறகு அந்த துறவி, ‘இளைஞனை பார்த்து, ' உன் வாழ்வின் எதிர்பார்ப்பு என்ன...?‘ என்று கேட்கிறார்... உடனே இளைஞன், ‘எனக்கு மகிழ்ச்சி வேண்டும்‘ என்று துறவியிடம் கூறினான்.... பின்னர், ‘மகிழ்ச்சிக்காக என்ன செய்தாய்...? எதை எல்லாம் இழந்திருக்கிறாய்‘ ...

காமராஜர்... ஒரு சரித்திரப் பொக்கிஷம்!!

 காமராஜர் ஆட்சி காலத்து  கிசு கிசு...!! அவரது ஆட்சியில் எழுந்த ஒரே கிசுகிசு, இதுவாகத்தான் இருக்கும்.  அதற்குக் காரணம், ஒரு தொழிற்சாலை தொடங்க காமராஜர் கொடுத்த திடீர் அனுமதி!! திண்டுக்கல் நகரத்தை விட்டு வெகு தொலைவில், ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி கேட்டிருந்தார்கள். அதை பரிசீலனையில் வைத்திருந்தார்கள் அதிகாரிகள். இதை தெரிந்து கொண்ட காமராஜர், அவசரம் அவசரமாக அதிகாரிகளை அழைத்தார். "உடனடியாக அந்த திண்டுக்கல்காரர் களுக்கு தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுங்கள்" என்று வாய்மொழி உத்தரவை பிறப்பித்து விட்டு, புறப்பட்டுப் போய் விட்டார். அதிகாரிகள் குழம்பிப் போனார்கள். "எதற்காக நமது முதலமைச்சர் அந்த திண்டுக்கல் தொழிற்சாலைக்கு இவ்வளவு தீவிரமாக ஆதரவு கொடுக்கிறார்? ஒருவேளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் நமது முதலமைச்சருக்கு வேண்டியவர்களாக இருப்பார்களோ?" அதிகாரிகள் இப்படி கிசுகிசுப்பது, காமராஜர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது. அதிகாரிகளை தன் அறைக்கு வரவழைத்தார். "என்ன உங்கள் சந்தேகம்? கேளுங்கள்!" அதிகாரிகள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். காமராஜரே பேசினார். "அவசரம் அவசர...