Posts

Showing posts from January, 2024

எல்லா துன்பங்களும் முடிவுக்கு வரும்.!!

 எல்லா துன்பங்களும் முடிவுக்கு வரும்.!!  சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.  ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது. வீட்டிற்கு ஓடி வந்துவிடவும் கூடாது'' என்றார்.  சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது. காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது.  ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த்தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்...

நம்பிக்கையின் பாற்றாக்குறை

 வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார்,  உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று. ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான். ஆசிரியர் : அப்படியெனில், சாத்தானை படைத்ததும் கடவுள் தானா? மாணவன் அமைதி காக்கிறான். சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான். ஆசிரியர் அனுமதிக்கிறார். மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும் இருக்கிறதா? ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது.நீ குளிரை உணர்ந்தது இல்லையா? மாணவன்: மன்னிக்கவும். தங்கள் பதில் தவறு.குளிர் என்ற ஒன்று இல்லை.அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா? ஆசிரியர் : ஆம், இருக்கிறது. மாணவன்:மன்னிக்க வும்.மீண்டும் தவறு.இருள் என்ற ஒன்று இல்லை.ஒளி பற்றாக்குறையை தான் இருள் என்கிறோம். உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம்.குளிரையும் இருளையும் அல்ல. அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில் எதுவுமில்லை. உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின் , நம்பிக்கையின் பாற்றாக்குறை. அந்த மாணவன் வேறு யாருமில்லை. ஆல்பர்ட...