நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

நல்ல எண்ணங்களையே 
மனதில் உதிக்குமாறு 
எப்படி செய்வது? 
நண்பர் கேட்டார்.

பொதுவாக ஓய்வாக இருக்கும் போது, நம் மனம் ஊர் மேயும். அந்த முரட்டு குதிரையை மெல்ல மெல்ல நம் வழிக்கு கொண்டு வர வேண்டும்.

பக்தி மார்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தின் திருவுருவை அடிக்கடி நினைத்தல், தெய்வ மந்திரங்களை பாராயணம் செய்தல், பகவத் கீதை, போன்ற நற்சிந்தனைகள படிப்பதை வழக்கமாக்கி கொள்ளலாம்.

டெல்லியில் என் நண்பரின் தந்தை உட்கார்ந்தால், நிமிர்ந்தால், 
எந்த செயல் செய்தாலும் அவரை அறியாமலேயேஹரே ராம் என்பார்.

ஞான மார்க்கத்தில், தியானம் செய்பவர்கள், பிரபஞ்சத்தையே அடிக்கடி நினைக்கலாம்.

எப்படி? நண்பர்.

இப்பொழுது நம் சூரியனை எடுத்து கொள்வோம். 

அது பூமியை விட19 லட்சம் மடங்கு பெரியது. சூரியனுக்கும் கடைசியாக 6 வது வட்டப்பாதையில் சுழலும் சனி என்ற கோளுக்கும் இடையே உள்ள தூரம் 
88 கோடி மைல்கள். 

Just imagine. நமது சூரிய குடும்பம் 
எவ்வளவு பெரியது என்று. இது போல கோடிக்கணக்கான சூரிய குடும்பங்கள் இப்பிரபஞ்சத்திலே உள்ளன. நினைத்தால் மலைப்பாக இருக்கும்.

பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை ஓய்வு நேரத்தில் அடிக்கடி நினைவிற்கு கொண்டு வரும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளலாம்.

அருட்தந்தை சொல்வது போல அந்த பிரபஞ்ச உணர்விலே மூழ்கி மூழ்கி அந்த மாபெரும் பிரபஞ்சத்தையே நமதாக்கி கொள்ள வேண்டும்.

பிரபஞ்சத்தை அடிக்கடி நினைப்பதால், 
வான் காந்தத்தில் பதிந்துள்ள பல ஞானிகளின் சிந்தனை பதிவுகள் நமக்குள்ளும் பிரதிபலித்து, நம்மையும் தூய்மை செய்யும்.

ஓய்வு நேரத்தில் நம்முள் இருக்கும் ஞான சக்கரங்களை நினைக்கலாம். அவற்றையும் நம் சிந்தனை உணர்வில் அடிக்கடி நினைவிற்கு கொண்டு வரலாம்.

அருட்தந்தை சொல்வார்: நினைத்த மாத்திரத்தில் சக்கரங்கள் சுழல வேண்டும். அந்த அளவிற்கு அந்த ஞான சக்கரங்களை நமதாக்கி கொள்ள வேண்டும் என்பார்.

தீய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் வராமல் தடுக்க, தீய எண்ணம் வரும் போதே, 
அதை செயல்படுத்தினால், என்னென்ன விளைவுகள் வரும் என்று சிந்தித்து மனதில் ஒரு முடிச்சு போட்டு கொள்ளுங்கள். 

பின் அதே தீய எண்ணம் வரும் போது, அந்த முடிச்சோடுதான் வரும். நாளை வட்டத்தில் தீய எண்ணத்தின் ஆதிக்கம் குறையும் நற்சிந்தனைகளே மலரும் என்று கூறுவார் அருட்தந்தை.

Basic Core point நல்ல எண்ணங்கள் 
மனதில் சுழல வேண்டும். 

செய்யும் செயல்கள் நற்செயலாக 
இருக்க வேண்டும்.

நாளாவட்டத்தில் நல்ல எண்ணங்களே மலரும்.

கருமையமும் தூய்மை அடையும்

நம் வாழ்வின் திசையையே 
மாற்றி விடும்.

முயற்சிக்கலாம். ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம்.

எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்.

Comments

Popular posts from this blog

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

உன் பேர் சொல்லு