Posts

Showing posts from May, 2022

அமைதி

ஒரு பைத்தியக்காரன் மீது கருணை கொண்ட சீடன், அவரை தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.  குரு சொன்னார்..  "அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள். உணவை, நீரை அருகில் வையுங்கள் ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம். பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார். அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம், நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்" என்றார். அவர் கத்துவார், கற்களை வீசுவார் ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர். அந்த பைத்தியக்காரனுக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது. நாட்கள் நகர்ந்தன, ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியக்காரன், "எனக்கும் தியானம் கற்று தருவீர்களா?" என்று கேட்டான். இது இன்றும் திபெத்திய புத்தமடாலயங்களில் நாடாகும் சிகிச்சை முறை.  "எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகி விடுகிறார்" என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள். "மற்றவர் பார்க்கவில்லை என்றல் பைத்தியக்காரத்தனங்கள் வளர்ந்துகொண்டே போகாது"!!!  தர்க்கம் பண்ணாதீர்கள்..... நம்முடைய பேச்சே தர்க்கத்திற்கு தீனி....  நம் அமைதியே அதற்கு பட்டினி....!...

நல்லவர்களின் தொடர்பு

*விஸ்வாமித்திரரின் பாக்கியம்* விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார். அந்த யாகத்தின் முடிவில், இருப்பதையெல்லாம் தானம் கொடுத்து விடவேண்டும் என்பது முறை. அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக்கொண்டி ருந்தார். அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார். வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டரும் அமைதியாகத் திரும்பினார். சில நாட்கள் ஆகின. விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய எண்ணினார் வசிஷ்டர். நல்லவர்களின் நல்ல தீர்மானம் அல்லவா? உடனடியாகச் செயல் பாட்டிற்கு வந்தது. ஆம்! வசிஷ்டர் யாகம் செய்தார், யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார். தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், ‘‘வசிஷ்டர் தானம் கொடுக்கிறார் என்றால், அது விசேஷம்தான். நாமும் போய் அதைப்பெற வேண்டும்” என்று புறப்பட்டு வந்தார். ஆனால், விஸ்வாமித்திரர் வருவதற்குள்ளாக வசிஷ்டர், தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் கொடுத்து முடித்து விட்டா...

காலம்

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று  கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின.   அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. அன்றிலிருந்து கரையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு. இப்படியே ஒரு வருடகாலம் சென்றது. கரையான்கள்  புற்றை கட்டி முடித்தன. பாம்பு பேசியது. ''கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?'' என்று கேட்டது. கரையான்கள் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியேவரும் என்று கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன.   ''புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால்,  நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக்கொள்ளுங்கள். இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் என் விஷத்துக்கு இரையாவீர்கள் என்று மிரட்டியது பாம்பு. சோகத்தோடு கிளம்ப...

வாழ்க்கை

லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது. அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசி வரை அந்த உடல் கிடைக்கவே இல்லை. * பிரிட்டனைச் சார்ந்த பெரும் பணக்கார யூதர் ரூட் சைல்ட். அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால் சிலபோது பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார். ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை அடைத்துவிட்டார். அவ்வளவு தான்..! கடைசி வரை கதவு திறக்கவே இல்லை. சப்தமிட்டார்.. கத்தினார்.. யாருக்கும் கேட்கவில்லை. காரணம், அவர் தங்குவது வீடல்ல.. அரண்மனை. பெரும்பாலும் அரண்மனையிலிருந்து பலநாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே சென்றிருப்பதாக குடும்பத்தார் நினைத்தனர். பசியாலும் தாகத்தாலும் கத்திக் கத்தி கூச்சலிட்டு ...

சின்ன பிரச்சனைகளுக்கு பெரிய முடிவு எடுக்க கூடாது

ஒரு நிமிடக்கதைகள்;*  உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன். நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப் பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை.    எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த அவன் அரசனிடம் சென்றான். "அரசே என் தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்றான். சிரித்த அரசன் "ஒரு முயலைப் பிடிக்க உன்னால் முடியவில்லையா?" என்று கேட்டான்.    "அரசே! அந்த முயலுக்கு மாய மந்திரம் தெரிந்திருக்க வேண்டும். நான் அதைப் பார்த்துக் கல்லையோ கட்டையையோ வீசினாலும் அவை அதன் மீது படுவது இல்லை" என்றான் அவன்.    "நாளையே வேட்டை நாய்களுடன் நான் அங்கு வருகிறேன். முயலின் மாய மந்திரம் எதுவும் என் வேட்டை நாய்களிடம் செல்லாது. அந்த முயலைப் பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன்" என்றான் அரசன்.    மகிழ்ச்சியுடன் தன் தோட்டத்திற்கு வந்தான் அவன் அரசனுக்கும் அவன் வீரர்கட்கும் சிறப்பான விருந்திற்கு ஏற...

தவறான புரிதல்

*குட்டி கதை *   ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள்.  ஒரு நாள் அந்த நகை வியாபாரியின் மனைவி தன் மகனை அழைத்து, ஒரு நீலக் கல் பதித்த நெக்லஸை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்..., மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம் தரும்படி கேள் என்றாள். மகன் அந்த நெக்லஸை எடுத்துக் கொண்டு, அவனது மாமாவின் கடையை அடைந்தான். அவனது மாமா அந்த நெக்லஸை முற்றிலுமாகப் பார்த்தார். அவனிடம் கூறினார்... என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..! அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று... பின் குடும்ப செலவுக்காக அவர் அவனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக் கொள் என்றார். எனவே, அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொ...

உதவி செய்வது முக்கியம்

ஆள் பார்த்து உதவுங்க..... ஒரு சொறிநாயை ஓநாய் கொல்ல வந்தது. அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக தியானத்தில் இருந்த முனிவரைச் சரணடைந்து தன் நிலையைச் சொன்னது. முனிவர் அதன் மேல் கமண்டல தீர்த்தத்தைத் தெளித்து #ஓநாயாக்கி விட்டார். பலசாலியான அது, தன்னைக் கொல்ல வந்த ஓநாயை விரட்டி விட்டது. ஓநாயைக் கொல்ல ஒரு சிறுத்தை வந்தது. உடனே, ஓநாய் முனிவரைச் சரணடைய அவர் தீர்த்தம் தெளித்து சிறுத்தையாக மாற்றி விட்டார்.  சிறுத்தையை பார்த்த சிறுத்தை "இது நமது இனமாயிற்றே' என விட்டுச் சென்றுவிட்டது. சிறுத்தையைக் கொல்ல ஒரு யானை வந்தது. சிறுத்தை வழக்கம் போல் முனிவரைச் சரணடைய அவர் அதை யானையாக்கி விட்டார். யானையைக் கொல்ல புலி வந்தது. யானை முனிவரிடம் ஓட அதை புலியாக்கி விட்டார். புலியைக் கொல்ல சிங்கம் வந்தது. புலியை சிங்கமாக்கி விட்டார் முனிவர். சிங்கநிலைக்கு உயர்ந்த சொறிநாய்க்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. "இனி நாம் சிங்கமாகவே இருக்க வேண்டும். ஒருவேளை, இந்த முனிவர் நம்மை மீண்டும் நாயாக்கி விட்டால், நாம் படாதபாடு படவேண்டியிருக்கும். எனவே, இவரைக் கொன்று விட வேண்டியது தான்'' என்றெண்ணி பின்னால் நின்று பாய்ந...

எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் நிகழ் காலத்தை மட்டும் ஆனந்தமாக அனுபவி

ஒரு பெரிய பணக்காரர். மன அழுத்தம் தாங்காமல் தவித்தார். அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார். ‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு, " எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் நிகழ் காலத்தை மட்டும் ஆனந்தமாக அனுபவி " என்று அறிவுரை சொன்னார்.  அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.  ‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது. நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம் இந்தமாதிரி சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா? என்னால நம்பமுடியலை!’ ஜென் துறவி கோபப்படவில்லை. ‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார். ‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’ ‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’ ’அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான் வந்திருக்கே...

அன்பு

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான். நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான். இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன். “பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு...

மனம்

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்?  ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்? சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....பின்னர்.. சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்!  அதனால் சத்தமிடுகிறோம்! துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்?  அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!  நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே! ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்......  ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை! கடைசியாக துறவி பதில் கூறுகிறார்..... எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்...

வலிமை

**ஒரு குட்டிக்கதை** ஒரு பணக்காரனுக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்!  வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவிக்கிறான்! போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்,.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்... இப்படியாக! அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறான்.  “இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவனுக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!"   அவன் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது...  7அது மட்டுமில்லை... கூடவே ஒரு 15 மில்லியன் டாலர்கள் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!" சரி.....

தெரியலை

"தெரியலை சாமி" °°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரைப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்”சாமி உலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே , அதுக்கு என்ன வழின்னு” கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் ”தெரியலயேப்பா’ன்னு” ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம.”என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட “சரி இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்துச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்” அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க. கொஞ்ச தூரம் போன பிறகு ஒரு இடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமா போனது. அந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு வந்திச்சி. மானப் ...

திரௌபதி

18 நாட்கள் போர்     திரௌபதிக்கு தனது வயது     80 ஆனது போல இருந்தது...     உடல் ரீதியாக      மற்றும் மனரீதியாகவும் கூட    அஸ்தினாபுரம் நகரைச் சுற்றி விதவைகள் அதிகமாக இருந் தனர்.     ஒரு சில ஆண்கள் மட்டுமே காணப்பட்டனர்.     அனாதைகள் அங்குமிங்கும் சுற்றித் திரிவதைக் கண்ட அவர்களின் அரசி திரௌபதி, அஸ்தினாபுரம் அரண்மனை யில் அசையாமல் வெற்றிடத் தைப் பார்த்துக்கொண்டிருந் தாள்.     பிறகு,     ஸ்ரீ கிருஷ்ணர்     அறைக்குள் நுழைய     திரௌபதிகிருஷ்ணரைப் பார்த்ததும்ஓடி வந்து அவனிடம் ஒட்டிக்கொண்டாள்...     கிருஷ்ணா அவள் தலையை தடவிக்கொடுக்கிறார்.அவளோ அழத்தொடங்கினாள்.      நேரம் மெல்ல நகருகிறது.     அவளிடமிருந்து விலகி     பக்கத்து படுக்கையில் உட்கார்ந்த கிருஷ்ணன் கேட்டார்.     "திரௌபதி,என்ன நடந்தது?"     "ஒன்றும் நடக்கவில்லையே கிருஷ்ணா"     கிருஷ்ணர்: விதி மிகவும் கொடூரமானது பாஞ்சாலி..     நாம் நினைப்பது ப...

வதந்தி

*வதந்தி பற்றிய ஒரு குட்டி கதை* (படித்ததில் பிடித்த நீதி கதை) அந்த முதியவர் பணி ஓய்வு பெற்றவர்.  வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், மனைவி பிள்ளைகள் இல்லை.   ஆனால், "கொஞ்சம் துடுக்குத்தனம் நிறைந்தவர்".....!! "மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர்".....!! அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான்.  அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை.   யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான்.  மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான்.   "இவருக்கு அவன் மேல் சந்தேகம்".....!!   "திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்".......!!  "காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்"......!!  "சில நாள்களில் மாலையில் போகிறான்"!!  "இரவில் வீடு திரும்புகிறான்"......!! "ஒருவேளை அவன் திருடனாக இருப்பானோ".!! என நினைத்தார்....!! "இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது"..!! "தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்".......!! காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார்.  `அந்த ஆள் திருடன்’ எ...