உன் பேர் சொல்லு

 ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தை பற்றி ஏற்கனவே அவரோடு வேலை பாத்தவங்க பலபேர் சொல்லி இருக்காங்க... "இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க"ன்னு...

 அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்... முதல்ல ஒரு வகுப்புக்குள்ள நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...


சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேட்க வேண்டாம்ன்னு முதல் பையனை எழுப்பி...


"உன் பேர் சொல்லு"


"பழனி"


"உன் அப்பா பேரு"


 "பழனியப்பன்",


அடுத்தப் பையனை எழுப்பி ,


"உன் பேர் சொல்லு"


 "மாரி"


"உன் அப்பா பேரு"


 "மாரியப்பன்..."


அவருக்கு கொஞ்சம் டவுட் வருது 🤔...

இருந்தும் அடுத்தப் பையனை எழுப்பி...


"உன் பேர் சொல்லு"


"பிச்சை"


"உன் அப்பா பேரு"


"பிச்சையப்பா"


இப்போது அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு..


அடுத்தப் பையன எழுப்பினாரு...


"முதல்ல நீ உன் அப்பா பேரைச்சொல்லு..."

 (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)


"ஜான்"


"இப்பொ உன் பேரைச் சொல்லு"


"ஜான்சன்"


கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி...😈


அடுத்த பையன எழுப்பி,

"உன் அப்பா பேரை சொல்லு..."


"டேவிட்.."


"உன் பேரு...?"


"டேவிட்சன்"


 கொ#லவெ#றி ஆயிட்டாரு😬


கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,

அடுத்த பையனை எழுப்பி,


"உன் தாத்தா பேரை சொல்லு"


"சார்... அப்பாவோட அப்பாவா?, அம்மாவோட அப்பாவா?"


ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு😬,


"அப்பாவோட அப்பா"ன்னாரு


"வீரமணி",


"சரி அப்பா பேரு?",


"வீ.ரமணி",


"உன் பேரு?",


"வீ.ர.மணி..."


🥺🥺🥺🥺


அப்புறம் என்ன... அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லியாம்... 

😜😜😜

Comments

Popular posts from this blog

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்