Posts

Showing posts from November, 2025

வாழ்வு

  *உறவுகளை அரவணைப்போம்!* ஒரு மருத்துவரின் பதிவு. எனக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்து இருக்கு, எனக்கு யாருமே தேவை இல்லை… இப்படித்தான் அந்த 65 வயது பெரியவர் ஆரம்பித்தார். கொஞ்சமா ஆல்கஹால் எடுத்திருந்தார் போல. நிலையில்லாமல் இருந்தார். ஒரு 15 நிமிடம் அவரோட 65 ஆண்டு கால வாழ்க்கையை பெருமிதத்தோட சொல்லி முடித்தார். சின்னவன் ஆஸ்திரேலியால இருக்கான். பொண்ணுங்க 2 பேர், ஒருத்தர் சென்னைல குடுத்திருக்கேன். இன்னொருத்தி பூனேல இருக்கா. மாப்பிள்ளை மிலிட்டரில இருக்கார். பெரியவன் என் கூட இருக்கான். நிறைவான வாழ்க்கை, என்றார். இவர் என் மருத்துவமனைக்குள் நுழைந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது. மனைவியுடன் வந்தார், ஏதோ விசேஷ வீட்டுக்கு போய் விட்டு வந்திருப்பார்கள் போல. நிறைய நகைகளும் பட்டுபுடவை, வேஷ்டியுமாக ஒரு செழிப்பு அவர்கள் உடையில் இருந்தது. மிகுந்த கனிவுடன் பேசினார்கள், தங்கள் உடல் உபாதைகளை சொன்னவர்கள், பின் தாங்கள் ஒரு ஆசிரியர் குடும்பம் என்றார்கள். மகன்கள், மகள், மனைவி, பெரியவர் என அனைவரும் ஆசிரியர்கள். சர்க்கரை நோய்க்கு மருந்தெடுப்பதால் அவரை தொடர்ச்சியாக பார்த்து வந்தேன். ஊரில் ரியல் எஸ்டேட் சூடு பிடி...

பிறரைக் குறை சொல்லும் பழக்கம்

 *எண்ணத்திற்கு எவ்வளவு வலிமை இருக்கிறது?* ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை சந்தித்த நண்பர் ஒருவர் தன்னுடைய உறவினரைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருந்தார்.  திடீரென கலைவாணர் நண்பரின் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து “இந்தப் பர்ஸில் எவ்வளவு சில்லறை இருக்கிறது" எனக் கேட்டார். "தெரியவில்லை. எண்ணிச் சொல்கிறேன்” என்றார் நண்பர். ''உமது பாக்கெட், உமது பர்ஸ், உமது பணம், இருந்தாலும் இதில் இருப்பதை எண்ணிச் சொல்ல வேண்டும் என்கிறீர்கள். ஆனால் உமது உறவுக் காரரைப் பற்றி எண்ணாமல், ஆராயாமல் ஏதேதோ சொல்கிறீரே” என்றார் கலைவாணர். வந்த நண்பர் குறை சொல்வதை நிறுத்திக் கொண்டார். பிறரைப் பற்றி எதிலும் குற்றம் காண்பதும், பார்க்கும் இடத்திலெல்லாம், "அது சரியில்லை இது சரியில்லை" என சொல்லித் திரிவதும் நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு அழகல்ல. நல்ல எண்ணங்கள் மனதில் இல்லாவிட்டால் எப்போதும் பிறரைக் குறை சொல்லும் பழக்கம் உருவாகிவிடும். எண்ணத்திற்கு எவ்வளவு வலிமை இருக்கிறது? என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு செயல். படுவது அவசியமாகும். நல்லதே நினைப்போம். நினைப்பது நிச்சயம் நிறைவேறும். *🍃Sri Yoga ...

கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி

 *ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின.* *யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி.* *நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின.* *கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது. இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.* *“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டது.* *இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன.“உயரத்தை அடையும்போது நமக்கு உயிர் இருக்காது” என்று கத்தின.* *ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது.* *கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின.* *“தற்கொலை முயற்சிடா தருதலை!”* *எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.* *எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது.* *அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது.* *“அவனுக்கு காது கேட்காது”.* *நாமும் சில நேரங்களில்...

பணிந்து நடப்பவர்களை தான் அனைவரும் விரும்புவார்கள்

 *பணிவு வேண்டும் | Be Humble* மௌரிய வம்சத்தின் தலைசிறந்த மன்னர் அசோகர்.  *கலிங்கப்போரே இவர் செய்த கடைசி போர். அந்தப் போரில் வீரர்கள் பட்ட வேதனைகளை கண்டு மனம் மாறி, இனி தான் போரே செய்வதில்லை என்று முடிவெடுத்து நாட்டு நலப் பணிகளில் கவனம் செலுத்தி தலைசிறந்தவராக விளங்கினார்.* புத்த மதத்தை உலகமெங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டு அதில் தம் மகளையும் மகனையும் ஈடுபட செய்த பெருமைக்குரியவர் அவர். *இத்தகைய பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான மாமன்னர் அசோகர். ஒருநாள் தனது ஆலோசகர்களுடன் சென்று கொண்டிருந்தார்.* அப்போது எதிரில் முனிவர் ஒருவர் வந்தார். *மாமன்னர் அசோகர் அந்த முனிவரை பார்த்ததும் ஓடிப்போய் காலில் விழுந்து வணங்கினார்.* இச்செயல், அருகில் இருந்த அமைச்சருக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தியது. *அமைச்சர் அசோகரை பார்த்து, “மாமன்னரே மிகப்பெரிய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய உங்கள் தலையானது சாதாரண ஒரு முனிவரின் காலில் படுவதா?” என்று கேட்டார்.* அதற்கு பேரரசர் அசோகர் எந்த பதிலும் கூறாமல் லேசாக சிரித்தபடியே சென்று விட்டார். *பிறகு ஒரு நாள் அமைச்சரை கூப்பிட்டு, “அமைச்சரே, எனக்கு ஒரு ஆட்டின் தலை, அட...

நன்றி கெட்ட உலகமடா இது

 🔹 ஒரு பாம்பு அதன் மீது ஒரு கல் விழுந்தபோது உதவிக்காகக் கூக்குரலிட்டது, 🔸 ஒரு பெண் தூரத்திலிருந்து வந்து அதைக் காப்பாற்றினாள். 🔹 அதைக் காப்பாற்றிய பிறகு பாம்பு கூறியது எனக்கு உதவி செய்பவர்களைக் கடிக்கப் போவதாக நான் சத்தியம் செய்துள்ளேன் 🔸 அந்தப் பெண் நான் உனக்கு உதவி செய்தேன் அப்படி இருக்க நீ எப்படி என்னைக் கடிக்க விரும்புகிறாய் என்று கேட்டாள் 🔹 பாம்பு நான் உன்னை நிச்சயமாக கடிப்பேன் உனக்கு இரக்கம் காட்டவே மாட்டேன் அது என் இயல்பு என்ன நடந்தாலும் இயற்கை மாறாது என்று பதிலளித்தது 🔸 அந்தப் பெண் கூறினாள் நமது இந்த பாதையில் நாம் சந்திக்கும் முதல் விலங்கிடம் கேட்போம் அது என்னைக் கடிக்க உனக்கு உரிமை அளித்தால் அதைச் செய் என்றாள் 🔹 சிறிது தூரம் நடந்த பிறகு அவர்கள் ஒரு யானை யை சந்தித்தனர் அவர்கள் அவரிடம் முழு கதையையும் சொன்னார்கள் 🔸 யானை தந்திரமாக கூறியது நீங்கள் என் முன் அதே காட்சியை மீண்டும் நடித்து காட்டும் வரை நான் அதை நம்பவே மாட்டேன் 🔹 அதற்கு அந்தப் பெண் பாம்பின் மீது கல்லை வைத்து யானையிடம் இப்படித்தான் நான் அதை ஆரம்பத்தில் பார்த்தேன் என்றாள் 🔸 யானை கூறியது கல்லுக்கு அடியில் ஆரம...