முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்
*ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின.* *யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி.* *நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின.* *கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது. இது தங்கள் சக்திக்கு இயலாத காரியமென்று.* *“முடியாது. முடியவே முடியாது” பல்லிகளில் ஒரு கூட்டம் பந்தயம் தொடங்கி சில நிமிடங்களுக்கு உள்ளாகவே விலகிக் கொண்டது.* *இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மீதியிருந்த பல்லிகளில் கணிசமானவை விலகிக் கொண்டன.“உயரத்தை அடையும்போது நமக்கு உயிர் இருக்காது” என்று கத்தின.* *ஒரே ஒரு பல்லி மட்டும் மூச்சைப் பிடித்துக்கொண்டு முன்னேறிக் கொண்டே இருந்தது.* *கீழே இருந்த பல்லிகள் எல்லாம் பெருங்குரல் எடுத்து கத்தின.* *“தற்கொலை முயற்சிடா தருதலை!”* *எந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் மேலும் சில நிமிடங்களில் உச்சியை அடைந்தது அந்த குட்டிப் பல்லி.* *எல்லாப் பல்லிகளுக்கும் ஆச்சரியம். எப்படி இவனால் மட்டும் ஜெயிக்க முடிந்தது.* *அந்த குட்டிப் பல்லியின் அண்ணன் ரகசியத்தை போட்டு உடைத்தது.* *“அவனுக்கு காது கேட்காது”.* *நாமும் சில நேரங்களில் இப்ப...