BF
ஒரு நாள் ஒரு சிறுவன் ஒரு சிறுமியிடம் சொன்னான்: நான் உன் BF என்று. சிறுமி கேட்டாள்..... "BF என்றால் என்ன...?" சிறுவன் சிரித்துவிட்டு பதிலளித் தான் " உனது சிறந்த நண்பன்" (Best friend) அவர்கள் பின்னர் காதலிக்கும் போது, அந்த இளைஞன் யுவதியிடம் கூறினான்.... "நான் உன் BF..." என்று அவள் அவன் தோளில் லேசாக சாய்ந்து கொண்டு வெட்கத்துடன் கேட்டாள்: "BF என்றால் என்ன...?" அவன் பதிலளித்தான்: "இது பாய் ஃப்ரெண்ட்..." (Boy friend) சில வருடங்கள் கழித்து அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள், அழகான குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள், கணவர் மீண்டும் புன்னகைத்து தனது மனைவியிடம் கூறினார்: "நான் உன் BF..." என்று மனைவி மெதுவாக கணவனிடம் கேட்டாள்: "BF என்றால் என்ன...?" கணவர் அழகான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைகளைப் பார்த்து பதிலளித்தார்: "குழந்தையின் அப்பா தான்..." (Baby's father) அவர்களுக்கு வயதாகிய போது ஒருநாள் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறார்கள், அவர் தனது மனைவியிடம் கூறுகிறார்: அன்பே... "நான் உனது ...