Posts

Showing posts from March, 2021

நம்மை சுற்றி எத்தனை நடமாடும் ஞானகுருக்கள்

நேற்று ஒரு நிகழ்வு. காலை சுமார் 9.30 மணி. தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்திவிட்டு, stationary பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவரும் ரோடை Cross செய்து கொண்டிருந்தார். அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பலாப்பழமும். வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று break போட்டு நின்றது. ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண்.கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார். என்ன தான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை. ஸ்கூட்டர்,அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில்,அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது. முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் க...

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂 *💗சிந்தனை கதை...* *இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை..!!* ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்... விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தார். மருத்துவரைக் கண்டதும் கோபமாக, "என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்... ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்? உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார். மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்" என்று கூறினார். "பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை, மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார். ம...

இல்லற ரகசியம்

ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று பேசியது.   ‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்', என்றது. ‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சிப்பதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு', என்றார் சாது. தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம் பேசினார் சாது. ‘சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்', என்றார் சாது.          ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. ‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் ம...

நல்ல மாற்றங்களை உருவாக்கி சந்தோஷமாக வாழுங்கள்

ஒரு புகழ்பெற்ற #ஞானியிடம்  சிலர் சென்று,  நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!  நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...! ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,     அவர்களிடம் ஒரு பாகற்காயை கொடுத்து    ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''  என்று அவர்களை பார்த்துக் கேட்டார். அவர்கள் என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள்.. என்றனர். ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.  நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு  வந்து இதை சேர்த்து விடுங்கள் என்றார்.   அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!    திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,  எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!  புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!  இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...! ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்ட...