எலி தந்த பரிசு
தினம் ஓர் குட்டிக்கதை. எலி தந்த பரிசு! ÷÷÷÷÷🤣÷÷÷÷÷÷ முன்னொரு காலத்தில் அவந்தி நாட்டில் ஒரு வயசான தாத்தாவும் பாட்டியும் வசிச்சு வந்தாங்க. தாத்தா ஓர் விறகு வெட்டி. தினமும் காட்டிற்கு போய் விறகு வெட்டி விற்று அதில் வரும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றிவந்தார். தாத்தா கொண்டு வரும் சொற்ப வருமானத்தில் சிறப்பா குடும்பம் நடத்துவாங்க பாட்டி. அன்று காலையில் பாட்டி பொரி அரிசி மாவு உருண்டை ஒன்றை பிடித்து தர அதை எடுத்துக் கொண்டு காட்டிற்கு விறகு வெட்ட புறப்பட்டார் தாத்தா. தாத்தா பச்சை மரங்களை வெட்ட மாட்டார். உலர்ந்து போன பட்டுப்போன மரங்களைத்தான் வெட்டுவார். அப்படி ஒரு பட்டுப்போன மரத்தினை கண்டுபிடிக்க நேரம் ஆகிவிட்டது. கொண்டு வந்த உணவு மூட்டையை ஓர் மரத்தின் அடியில் வைத்துவிட்டு மரத்தினை வெட்ட ஆரம்பித்தார். தேவையான அளவு வெட்டி முடித்ததும் அதை சுமையாக கட்டி வைத்தார். நண்பகல் உச்சி வெயில் மண்டையை கொளுத்தவும் அருகில் இருந்த ஓடையில் முகம் கழுவி விட்டு சாப்பிடலாம் என்று முகம் கழுவிக்கொண்டு தான் உணவினை வைத்த மரத்தடிக்கு வந்தார். ...