அறிவு, ஞானம் என்றால் என்ன?
அறிவு என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? இரண்டுக்கும் வித்தியாசம் என்ன? பகவான் ராமகிருஷ்ணரிடம் பாடம் படிப்பதில் நிறையப் பயன்கள் உண்டு. அவர் எந்த ஒரு விஷயத்தையும் மிக மிக எளிமையாக விளக்குவார். புரியாததைப் புரிய வைப்பார். அன்றாட வாழ்க்கையில் உள்ள எளிய உதாரணங்களைக் கூறி தெளிவடையச் செய்வார். அவற்றுள் ஒன்றுதான் இது: பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது. அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? " என்று குருவிடம் கேட்டனர். அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாள்கள்பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்க வில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை. பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம்_என்பது_எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்த...