Posts

Showing posts from December, 2021

பொய்யும் மெய்யும்

*குட்டிக்கதை*  * *பொய்யும் மெய்யும்* * *எங்க ஊர்ல அய்யா கண்ணு* *வாத்தியார்னு* *ஒருத்தர்* இருந்தார். ஆரம்ப பாடசாலையிலே வேலை.கதை நல்லா சொல்லுவார்..‌  ஆனால், அத்தனையும் பொய் கலந்திருக்கும்.. கற்பனை ஓட்டம் மிக நேர்த்தியாக இருக்கும்... சொல்வதெல்லாம் உண்மை போல இருக்கு... பாதி பொய் கலந்திருக்கும்....  டே! பசங்களா ! உங்க வயசுல நான் சிலம்பம் கற்று நல்ல தேர்ச்சி பெற்றவன்டா ! ஒரு முறை படைவீச்சு வீசும் போது கால் இடறிவிட்டது அதுல இருந்து இப்ப வர கம்பு தொடுவதில்லை என்று சலித்துக் கொள்வார்...  ஆனா சிலம்பு கலையில் சிலாவரிசை கூட தெரியாது. அவர் கால் வழுக்கி வயலில் விழுந்தது இருட்டுல தண்ணீர் பாய்ச்சிய போது, லேசா கால் சுணக்கம் போட்டு நடப்பார். இவர் ஊரு விட்டு ஊர் வந்ததால அந்த விபரம் யாருக்கும் தெரியாது. வர்மக் கலை அத்துபடிடா!எங்க தாத்தா சாகும் போது சத்தியம் வாங்கிட்டாருடா ! அதனால் தான் அதை யாருக்கும் காத்துக் கொடுக்க முடியாமல் போயிட்டது என்று வாய் கூசாமல் பொய் சொல்லுவார். இதைக் கேட்ட பசங்களுக்கு நாமும் நம் ஆசிரியரைப் போல பல கலைகளை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கியது... அடே! நான் ச...

யாரையும் நம்மால் திருத்த முடியாது

மனமே பிரச்சினை தனியாக *வேட்டையாடுவதை விருப்பமாக கொண்ட அரசன் ஒருவன்* வழிதவறி காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். *காட்டில் முனிவர் ஒருவர் குடில் அமைத்து தங்கி இருப்பதை கண்டு* அன்று இரவுப்பொழுதை அங்கேயே கழிக்கலாம் என்று முனிவரிடம் தங்க அனுமதி கேட்டான்.. முனிவரும் தாராளமாக *தங்கி* கொள்ளுங்கள் என கூறினார்.. முனிவரும், அரசரும் அந்த சிறிய குடிலில் *தூங்க* ஆரம்பித்தனர்.  இரவு முழுவதும் *முப்பது அல்லது நாற்பது நாய்கள்* அந்த குடிலை சுற்றி *குரைத்துக்* கொண்டே இருந்தன.  அரசரால் *தூங்கவே* முடியவில்லை. அவர், அன்று காலை முழுவதும் வேட்டையாடி *களைத்து* இருந்தார்.. மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க *அரசருக்குக் கோபம் அதிகமானது*. நாய்களோ *வெறித்தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக்* கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் முனிவர் நிம்மதியாக *உறங்கிக்* கொண்டிருந்தார். அவரை எழுப்பிய அரசர்,  ''என்ன மனிதர் நீங்கள்...  இவ்வளவு *சத்தத்துக்கு* மத்தியில் உங்களால் எப்படி *உறங்க* முடிகிறது...???'' என்று புலம்பினார். முனிவரோ, தனது வழக்கமான *நிதானத்துடன்* கூறினார்:  ''அந்த ந...

உறுதியான மனோதிடத்தால் தான்! எது நடந்தாலும் மன தைரியம் வேண்டும் வாழ்வில் வெற்றி காண...

மாவீரன் நெப்போலியன் சிறு வயதில்  ராணுவ விடுதியில் படித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் ஒரு நாள் நெப்போலியன் . அறைக்கு பக்கத்து அறையில் உள்ள மற்றொரு மாணவனின் அழகான பை காணாமல் போய் விட்டது .  உடனே அந்த மாணவன் தன் மேலதிகாரியிடம் புகார் கொடுத்தான் . உனக்கு  யார் மேலையாவது சந்தேகம் இருக்கானு அந்த மேலதிகாரி கேட்டார்.  அதற்கு அந்த மாணவன் நெப்போலியன் மீது தான் எனக்கு சந்தேகம் என்று    கூறினான்.  உடனே அந்த அதிகாரி நெப்போலியனை தன் அறைக்கு அழைத்தார்.  நெப்போலியன் வந்தவுடன் அந்த அதிகாரி எதையும் விசாரிக்காமல் இனி   திருடுவியா  என்று நெப்போலியனை அடிக்க ஆரம்பித்தார் .  நெப்போலியன் எதுவும் பேசாமல் அடியை வாங்கி கொண்டார். , சிறிது நாட்கள்  கழித்து அந்த மாணவன் தன் மேலதிகாரியிடம் ,  அன்று தன் பையை திருடியது நெப்போலியன்  இல்லை , வேறொரு மாணவன் ” என்று கூறி மன்னிப்பு கேட்டான்.  மேலதிகாரி தவறு செய்யாத நெப்போலியனை அடித்து விட்டோமே என்று  வருத்தப்பட்டு, நெப்போலியனை தன் அறைக்கு அழைத்தார். நெப்போலியன் அறைக்கு வந்தவுடன் ...

எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை மற்றவர்களின் மீது வெளிபடுத்தக்கூடாது

*சுமைதாங்கி மரம்..!*    ஒரு ஊரில் தச்சர் ஒருவர் இருந்தார். அவர் காலையில் அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக்கொண்டே சென்று மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு சென்றார். தாமதமாக வேலைக்கு வந்ததால் அவருடைய முதலாளி அவரை கடுமையாக திட்டினார். அதனால் மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.  சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம்பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே! என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். ஆனால் அவருடைய வண்டி மீண்டும் பழுதானது. இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி வீட்டிற்கு போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்! என்று முதலாளி சொன்னதும் அவர...

நீ நீயாகவே "மனிதனாகவே இரு"

*ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..!*  *சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!*  காளிதாசர் அவரைப் பார்த்து அம்மா தாகமாகஇருக்கு... கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்..... அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!  உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, இந்த பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா என நினைத்து நான் ஒரு பயணி அம்மா என்றார்! உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன்* ! ஒருவர் *சூரியன்* ! இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....! சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள் என்றார் காளிதாசர்! உடனே அந்தப் பெண், உலகில் இரண்டு விருந்தினர் தான்! ஒன்று *செல்வம்!* இரண்டு *இளமை!* இவை இரண்டும் தான் விருந்தினராக வந்து உடனே போய் விடும் என்றாள்! சற்று எரிச்சலான காளிதாசர் தான் ஒரு பொறுமைசாலி என்றார்! .... உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்...! ஒன்று *பூமி* ! எவ்வளவு மிதித்தாலும், எவ...

ஏமாற்றம், சோகம், கோபம், பொறாமை, பேராசை

ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு... ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும். தன் பையில் பொறாமையை சேகரித்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது. வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது!. ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை. சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே! உடம்புக்கு என்ன?" என்றது. "...

பக்குவம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *👑பக்குவம்👑* *தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.* *அப்போது ஒரு பெரியவரும் ரோடை கிராஸ் செய்து கொண்டிருந்தார்.* *அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பலாப்பழமும்.* *வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.* *அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது.* *ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண்.கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார்.* *என்ன தான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை.* *ஸ்கூட்டர்,அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில், அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது.* *முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன...

சகுனி பற்றிய ரகசியங்கள்

சகுனி பற்றிய ரகசியங்கள்:-) வெகு காலத்திற்குப் பின்- கண்ணில் பட்ட அற்புதமான பதிவு!!. ஒரிஜினல் பதிவர்க்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம். 🤘🙏🙏. தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி. 'இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள் தானே என் கண்ணீர் துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே!!' என எண்ணியபடியே.. இடையில் இருந்த குறுவாளால் தந்தையின் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி. அவன் தந்தை சுபலனோ வலிதாளாமல் உதடு கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் செருக அமர்ந்து இருந்தான். கண்களைத் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான். "மகனே சகுனி! எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ, இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன். நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வ...

யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்

*ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்* *வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை* *தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னியை மாற்ற ஆரம்பித்தார்* *அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,கால் தடுக்கிக் கீழே விழுந்தார்* *கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய் பக்கத்தில் இருந்த சாக்கடையில் விழுந்தன* *என்ன செய்வது?" என்று யோசித்தார்* *அப்போது கிழிந்த ஆடையுடன் ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்* *அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்* *அந்த விஞ்ஞானி தன் மனதிற்குள் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணினார்* *அவனிடம்* *இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து கொடுக்க முடியுமா எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றார்* *அதற்கு வழிப்போக்கன் இதுதான் உங்கள் பிரச்சினையா அந்தக் சாக்கடையில் இறங்கி போல்ட்டுகளை எடுத்துத் தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது என்றார்* *அப்படியா? என்று ஆர்வத்துடன் கேட்டார் விஞ்ஞானி* *மூன்ற...