Posts

Showing posts from August, 2021

நமக்கும் இதே நிலைமைதான்... மறந்துவிடாதீர்கள்..!

நமக்கும் இதே நிலைமைதான்... மறந்துவிடாதீர்கள்..! கிராமத்தில் இருந்த ஒரு குடும்பம் நகரத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தது. அந்த காரின் உள்ளே கணவன், மனைவி, அவர்களின் ஐந்து வயது மகன், வயதான அப்பா! ஆகிய நான்கு பேரும் இருந்தார்கள். கணவன் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். அவரது மனைவி அருகில் உட்கார்ந்து இருந்தாள். அவர்களின் குழந்தை பின்புற சீட்டில் தாத்தாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்றதும் காரை ஒரு மெடிக்கல் ஷாப்பில் நிறுத்தினார். அங்கிருந்து கீழே இறங்கி அவன் தந்தையிடம் இருந்து மருந்துசீட்டை வாங்கிக்கொண்டு மெடிக்கலுக்கு சென்றான். அவரது தந்தை, சும்மா ஒரு நாலு நாளைக்கு மட்டும் வாங்குனா போதும், டாக்டருங்க அப்படிதான் எழுதி கொடுப்பாங்க என்று கூறினார். ஆனால், அவரது மகன், நீங்க சும்மாருங்கப்பா... டாக்டர் சொன்ன மாதிரி எல்லா மருந்து மாத்திரையையும் ஒரு மாசத்திற்கு வாங்கிக்கலாம். நீங்க ஒரு மாசத்திற்கு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா சரியாயிடும் என்று சொல்லி மருந்துசீட்டை வாங்கிச்சென்று எல்லா மருந்துகளையும் வாங்கி வந்தார்! அதைப்பார்த்த குழந்தை தன் அப்பாவின் பாசத்தை கவனித்துக் கொண்டு இருந...