Posts

Showing posts from July, 2020

தன்னுள் இருப்பது தெய்வம்

வாழ்க வளமுடன்! தன்னுள் இருப்பது தெய்வம் என்று உணரும் போது தன்னை உணர முடியும். அதற்காக  ஒரு   கதை. ஒரு குருவிடம் பல சீடர்கள் படித்து வந்தனர்.  அச்சீடர்களில்  ஒருவன் தான் எப்போதும் இரவில் கிருஷ்ணனுடன் விளையாடுவதாகக் கூறிக் கொண்டு இருப்பான். மற்ற சீடர்களுக்கு இவனைக் குறித்து   பெருமைப் படுவர். தங்களுடன் விளையாட கடவுள் வரவில்லையே என ஏங்குவர். படிப்பிற்கு உரிய காலம் முடிந்தது.அவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டனரா எனச் சோதிக்க குரு விரும்பினார்.எனவே தன் ஆசிரமம் வழியாகச் சென்ற ஒரு ஞானியரை அழைத்து வந்தார்.அந்த ஞானியர் குயவராய் இருந்தவர். மண்பானை வெந்ததா எனச் சரிபார்க்க கையில் ஒரு குச்சியை வைத்து தட்டிப்பார்ப்பார். தட்டும்போது " "ங்" என்ற சத்தம் வரும். அதைக்கொண்டு பானையைச் சோதிப்பார். ஞானியான பின்னும் கையில் அக்குச்சி வைத்து இருந்தார். குரு அழைத்தவுடன் ஞானி, சீடர்களைச் சோதிப்பதாக ஒப்புக் கொண்டார். அனைத்து சீடர்களையும் அமர வைத்து கண்ணை மூடி தவ நிலையில் இருக்க வைத்தார்.பின்னர் குச்சிக் கொண்டு மண்டையில் தட்டிப் பார்த்து முடிவு சொன்னார். ஒரு சீடனைத் தவிர அனைவரும் தேர்ச்ச...

விலை மதிப்பற்ற வாழ்க்கை…

விலை மதிப்பற்ற வாழ்க்கை… ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி, அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள்” என்றான். உடனே பிச்சைக்காரன் “அப்படியானால் ஒரு ரூபாய் தந்து விட்டு இந்தக் கல்லை வைத்துக்கொள்” என்றான். அதற்கு வைர வியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன். இல்லை என்றால் வேண்டாம் என்றான். பிச்சைக்காரன், "அப்படியானல் பரவாயில்லை. அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான். வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்து விடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி, அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைர வியாபாரி அதிர்ச்சியுடன் “அட அடி முட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்...

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.....!!

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......,  " தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!!  "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!!  இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!!  "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"....,  "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!!  மற்ற நாய்களும் குறைத்தது.  " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்....,  ...

அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும்...

அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் ... அரண்மனையில் பணிபுரியும் ஒரு சாதாரண சேவகர் எப்போதும் சிரித்தபடி மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து போறாமைப்பட்டான் அரசன் . “ பிரமாண்டமான அரண்மனை , ஏகப்பட்ட எடுபிடிகள் . மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி … மகிழ்ச்சி … இவனுக்கு இருப்பது எப்படி ? என அவனையே நேரில் விசாரித்தார் அரசர் . “ மேன்மை தங்கிய மன்னரே … நான் ஓர் ஏழைக் காவலன் . எங்கள் குடும்பத்தின்தே வைகள் மிக மிகக் குறைவு . மழையையும் , வெயிலையும் மறைக்க ஒரு கூரை … வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு … மானம் காக்க ஒரு துணி … இதற்கு என் வருமானம் போது மானது . வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை … அதனால் , நிம்மதியாக இருக்கிறேன் ..’ என்று பணிவுடன் கூறினான் சேவகன் . இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்ட மன்னர் , “ வேண்டுமானால் அவனையும் நமது கவலைப்படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம் . ரொம்பவும் சுலபம் …’ என்று பணிவுடன் சிரித்தார் அமைச்சர் . “ அத...

படிப்பினை நிறைந்த ஒரு சிறுகதை

படிப்பினை நிறைந்த ஒரு சிறுகதை - கட்டாயம் வாசியுங்கள் .. ஒரு ஆத்தங்கரையில ரெண்டு ஆலமரம் இருந்துச்சு . ரொம்ப தூரத்தில இருந்து பறந்துவந்த குருவி ஒண்ணு , முதல் ஆலமரத்துக்கிட்ட வந்து ,' ரெண்டு மாசம் மட்டும் உன் கிளையில தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறிச்சிக்கிடட்டுமா ?' ன்னு கெஞ்சிக் கேட்டுக்குச்சு . ஆனா அந்த மரம் ,' அதெல்லாம் முடியாது ' னு கண்டிஷனா சொல்லிருச்சு . சரினு அடுத்த மரத்துக்கிட்டே போச்சு அந்தக்குருவி . இடம்தானே .. தாராளமா இருந்துக்கோ ' னு பெரிய மனசு பண்ணிச்சு அந்தமரம் . ஒரே மாசம்தான் ...... ஆத்துல வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பிச்சது . அந்த வெள்ளத்த தாங்க முடியாம அந்த முதல் ஆலமரம் அடிச்சிக்கிட்டு போக ஆரம்பிச்சது . ஆனா , குருவிக்கு இடம் கொடுத்த 2 வது ஆலமரம் நிலையா நிலைச்சு நின்னது . முதல் ஆலமரத்தைப்பார்த்த குருவி ,' அடுத்தவங்களுக்கு உதவி செய்யாதவனை ஆண்டவனே தண்டிச்சுட்டார் ' னு எல்லா மனுஷங்களும் நினைக்கற மாதிரி நினைச்சது . ஆனா , வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் ப...

எடை! (சிறுகதை) - நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

எடை!      (சிறுகதை)                            நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு  உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து. வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார். கேட்டை திறந்தபடி ஒரு 50ஐ கடந்த நபர் நின்றிருந்தார். அழுக்குச்சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் பேப்பர் எடுக்கறேங்க! அம்மா வரச்சொல்லியிருந்தாங்க என்றார். ஊம்.. என்ற மணிவாசகம், ”என்ன விலைக்கு எடுத்துக்கறே?” ”இங்கிலீஷ் பேப்பர்னா 12 ரூபா கிலோ! தமிழ்னா பத்து ரூபாங்க!” “ரொம்ப கம்மியா யிருக்கே!” ”இல்லீங்க போனமாசம் 10 ரூபா  8 ரூபாதான் எடுத்தேங்க! இப்ப ரெண்டு ரூபா கூடியிருக்கு!” ” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா?” “நமக்கெதுக்குங்க அதெல்லாம்?” “230 ரூபா சில சமயம் 250 கூட! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபாதான் கிடைக்குது..!” ”வேஸ்ட் பேப்பர்தானுங்களே? இதை கொண்டு போய் கடையில போட்டா எங்கள...

அனைவருக்கும் பாடம் புகட்டும் அருமையான நிகழ்வு.

அனைவருக்கும் பாடம் புகட்டும் அருமையான நிகழ்வு. கேரளாவில்  ஒதுக்குப்புறமா ஒரு ஊரு. அங்க 8 சென்ட்டுக்கு நடுவுல, மூனு சென்டுல ஒரு  வீடு. வீட்டை சுத்தி தோப்பு. தொடர்ச்சியான பருவ மழையும், குளிர்ச்சியான கிளைமேட்டும் சேர்ந்து மரப்பட்டையில் பச்சையா பாசம் படிந்த மரங்கள். பாக்குற எல்லா பக்கமும் பச்சை பசேல்னு ஒரே குளிர்ச்சியா இருக்கும். இந்த வீட்டுக்கு பக்கத்து வீடு எங்க வீடு. பக்கத்து வீடுன்னு  சொல்லக்கூடாது. சரியாச் சொல்லணும்னா அடுத்த வீடு. அந்த வீட்ல ஒரு வயதான தம்பதிகள். அவங்கள  தேடி யாரும் வந்த மாதிரி இல்ல. பசங்க எல்லாம் வெளிநாட்டில இருப்பாங்க போல. நாங்க புதுசா கல்யாணம் ஆன இளம் ஜோடி. இனிமே தான் குழந்தை. வார நாட்களில் எங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு போய்ட்டு வரவே சரியா இருக்கும். எப்படியோ எங்களுக்குள்ள பழக்கம் ஆகி ஒவ்வொரு sunday ஈவினிங்கும் அவங்க நந்தவனத்தில் தான் எங்களுக்கு காபி. காபி குடித்து விட்டு ஒரு மணி நேரசம்பாஷணைக்கு பின் தான் வீடு. நல்லா ரிலாக்ஸ்டா இருக்கும். அந்த சில்லென்ற குளிரில் அவசரம் இல்லாமல் காபியை குடித்துவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருப்ப...

Don't be dull, keep on having fun

Once a monkey wished to die due to sadness, he pulled the ears of a sleeping lion....  The lion woke up and roared with anger: - Who did this..?  Who has called his death...?  Monkey :- I am Maharaj, I am very depressed due to lack of friends and I want to die, you eat me....  The lion asked with a laugh :- Did anyone see you while pulling my ears…?  Monkey :- No chief....  Lion :- Okay, pull one more time, it feels very good... The essence of this story... By living alone, even the king of the forest gets bored…. So stay in touch with your friends, keep pulling their ears, dragging, ..  Don't be dull, keep on having fun....     🍁🍁👆😜😀

பார்வையை விரிவுபடுத்துங்கள்

*வித்தியாசமாக சிந்தியுங்கள் !* *சில சிறிய மாற்றங்களால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா* என்று யோசியுங்கள். முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான். மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான். ஓரு மகன் சொன்னான், “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்” வியாபாரி கேட்டான். “எப்படி?” “புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளு...

கடைசி இலை

*“கடைசி இலை’ (Last leaf )*👇 இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான். அவன் மனதில் அணுவளவு கூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டு விட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். அவனது அறையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது. அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான். மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன. அந்தக் கடைசி இலை விழும் போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக்கொண்டே வருகிறான். செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை. நாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான். பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.! இதைக்கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது. நம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒ...

சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு ....

ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.  பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் போட்டு விட்டு, இந்த பழம் மிகவும் புளிப்பாக உள்ளது என்று அந்த பாட்டியிடம் கொடுத்து சாப்பிட சொல்லி புகார் செய்வார். உடனே பாட்டி ஒரு சுளையை வாயில் போட்டு விட்டு, இல்லையேப்பா, நல்லா தானே இருக்கு" என்பார், உடனே அந்த இளைஞர் எதுவும் பேசாமல் மீதி பழங்களை எடுத்துக் கொண்டு செல்வார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர் மனைவி அவரிடம், ஏங்க.. பழங்கள் நல்லா இனிப்பாக தானே உள்ளது, என் தினமும் இப்படி நல்லா இல்லைனு சொல்லி டிராமா போடறீங்க" என்று கேட்ப்பார். உடனே அந்த இளைஞர் சிரித்து கொண்டு மனைவியிடம், அந்த பாட்டி நல்ல இனிப்பான பழங்களை தான் விற்கிறார், ஆனாலும் தனக்கென்று ஒரு பழத்தைக் கூட சாப்பிட மாட்டார். நான் இப்படி குறை கூறி கொடுப்பதால் தினம் அவர் காசு இழப்பின்றி ஒரு பழத்தை சாப்பிடுக...

இனிமே நீதான் என்னோட குரு!

அது ஒரு பெரிய மைதானம். அங்கே மூன்று பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த வழியாகச் சென்ற ஒரு சாமியார் அவர்களைக் கவனித்தார். குழந்தைகள் உற்சாகமாகச் சிரித்து விளையாடுவதைச் சிறிது நேரம் ரசித்தார். அதன் பிறகு அவர் மெல்லமாகக் கைதட்டி அவர்களை அழைத்தார். பையன்கள் சாமியாரை மேலும் கீழும் பார்த்தார்கள். அவருடைய விநோதமான உடை அலங்காரமும் ஜடாமுடியும் அவர்களுக்குச் சிரிப்பு மூட்டியது. சாமியார் அவர்களைக் கேட்டார். ‘கண்ணுங்களா, நீங்க எப்பவும் இந்த மைதானத்தில் தான் விளையாடுவீங்களா?’ ‘ஆமா சாமி!’ ‘எதுக்காக தினமும் விளையாடறீங்க? அதனால உங்களுக்கு என்ன பலன்?’ முதல் பையன் சொன்னான். ‘நல்லா விளையாடினால் உடம்பு பலமாகும். அதுக்கப்புறம் நாம யாரையும் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை. எதிர்த்து நம்மை வர்றவங்களை எல்லாம் ஊதித் தள்ளிடலாம்!’ இந்த பதிலைக் கேட்டுச் சாமியாருக்கு மிகவும் மகிழ்ச்சி. ‘நீ பெரிய பயில்வானா வருவே’ என்று அவனை ஆசிர்வதித்தார். அதன் பிறகு இரண்டாவது பையனின் பக்கம் திரும்பினார். ‘நீ ஏன்ப்பா தினமும் விளையாடறே?’ ’ஜாலியா விளையாடினால் தான் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும். அதுக்கப்புறம் முகத்தைக் கழுவிகிட...

கடமையில் கண்ணாக இரு

Image

ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? - கலைவாணர்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴 *💗படித்ததில் பிடித்தது...* *ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? - கலைவாணர்* ஒரு நல்ல நகைச்சுவை எப்படியிருக்கனும்? என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்காங்க.  ஆனா, "கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்" குடுக்கற விளக்கம் என்ன தெரியுமா? நகைச்சுவை அடுத்தவங்களுக்குத் துன்பம் குடுக்காம இருக்கனும். அடுத்தவங்க மனசைப் புண்படுத்தப்படாது. அது தான் சிறந்த நகைச்சுவைங்கிறார். அதுக்கு அவர் ஒரு உதாரணமும் கொடுக்கிறார். ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க. அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும் போய்கிட்டிருக்காங்க.... வழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது. ஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டு பக்கத்துலே இருந்த ஏரியிலே கை, கால் கழுவிக்கிட்டிருந்தார். உடனே அந்தப் பணக்காரப் பையனுக்கு ஒரு யோசனை! அவன் சொன்னான், டேய்! இப்ப ஒரு வேடிக்கை செய்யலாம்... அந்தச் செருப்பு இரண்டையும் தூக்கி எட்டத்துலே வீசி எறிஞ்சிடுவோம். அந்த ஆளு வந்து பார்த்துட்டு செருப்பைத் தேடி அல்லாடு...

இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை...

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 *இன்பங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமில்லை..!!* ஒரு மருத்துவர், நோயாளி ஒருவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாக அழைக்கப்பட்டிருந்ததால், வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்தார்... விரைவாக தன் உடைகளை மாற்றிக்கொண்டு சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார்... அங்கே சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய இளைஞனின் தந்தை மருத்துவரின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தார். மருத்துவரைக் கண்டதும் கோபமாக, "என் மகன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்... ஏன் நீங்கள் இங்கு வர இவ்வளவு தாமதம்? உங்களுக்கு பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?" என்று கதறினார். மருத்துவர் புன்னகையுடன், "மன்னியுங்கள், நான் மருத்துவமனையில் இல்லை... எனக்கு அழைப்பு வந்ததும் என்னால் இயன்ற அளவு விரைந்து வந்தேன்... சற்று பொறுமையாக இருங்கள்" என்று கூறினார். "பொறுமையாக இருக்கவா?" அந்த தந்தை, மேலும் ஆத்திரத்துடன், "உங்கள் மகன் இவ்வாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தால் நீங்களும் பொறுமையாக இருப்பீர்களா? உங்கள் மகன் இறக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்" என்று கொந்தளித்தார். மருத்துவர் சிரித்த முக...