Posts

Showing posts from April, 2022

பொருத்தம்* *மேட்ரிமோனி

பொண்ணு வீட்டுக்காரங்க பண்ணுன டார்ச்சரால் கடுப்பான யாரோ எழுதியது போல் இருக்கிறது... ஆனால் க்ளைமாக்ஸ் செம டிவிஸ்ட்டு. ●X: சார்... நான் T. Nagar லேந்து பேசறேன் உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா பேசணும். ○Y : நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க. ●X : சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா... ○Y : நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!... ●X: சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன். ○Y : நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம். ●X : 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன?  Y : 6,5,4,3,2,1ங்கறது என்னதுன்னா.. 6 ன்ன பையன் 6 டிஜிட்ல சம்பளம் வாங்கனும் அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும். 5 ன்ன பொண்ணுக்கு நிச்சயதார்த்தின் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும். 4 ன்ன, 4 சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும். 3 ன்ன, மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே ...

தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால்

🌼ஒருகுட்டி கதை 🌼ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார். 🌼'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, 🌼அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். 🌼அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர்.  🌼அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். 🌼அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார். 🌼அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங...

சில சந்தர்ப்பங்களில் வாய் மூடி இருக்க பழகிக்கொள்ளுங்கள்

_மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது . மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்._ _(1)- மதத்தலைவர்_ _(2)- வழக்கறிஞர்_ _(3)- இயற்பியலாளர்_  _முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._  _ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்._  _மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார்._ _அடுத்ததாக வழக்கறிஞர்,                அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._ _"நீதி! நீதி! நீதியே வெல்லும்" என்றார்._ _மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார்._ _அடுத்ததாக இய...

நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது

*நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது..!!*                                                                          ஒரு கிராமத்தானுக்கு லாட்டரியில பரிசு விழுந்தது. அந்த பணத்தை எடுத்து கொண்டு தனக்கு காரும்,கோட்டு சூட்டும், தொப்பியும் வாங்கி கொண்டு கிராமத்திற்கு வந்தார். அந்த கிராமத்தில் யாரும் காரையே பார்த்தது இல்லை. இவர் வருவோர் போவோரிடம் எல்லாம் பார்த்து கையை அசைத்து கொண்டே சென்றார். அந்த கிராமத்தையே சுற்றி வந்தார். ஆனால், ஒருவரை கூட அவர் இடிக்கவில்லை. ஏன்னா அந்த காருக்கு முன்னாடி இரண்டு குதிரைகளை கட்டி ஓட்டிகிட்டு இருக்கார்.  அவருக்கு கார் இஞ்சின் ஸ்டார்ட் பண்ண தெரியலையாம். காருக்குள்ள 100 குதிரை சக்திகள் இருக்கிறது.  ஆனால், இவர் வெளியே 2 குதிரையை கட்டி ஓட்டிக் கொண்டு இருக்கிறார். *இன்றும் அநேகம் பேர் இவரைப் போலத்தான்...* *நமக்குள்ள எவ்வளவோ சக்தி இருக்கிறது. ஆனால், நாம் யாரும் அதை பயண்படுத்...

விதி

*விதி*  . இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள். . ஒருநாள் அந்த கிளி நோய் வாய்ப்பட்டு விட்டது. . அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார். உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி, இந்த கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள். கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள். .  இந்திரன், கவலைப்படாதே!! இந்திராணி... நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்... ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே? அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதி விடுவோம் என்று சொல்லிவிட்டு பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்.. விஷயத்தைக்கேட்ட பிரம்மா , . இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை. . உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில். . நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ... நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா. . மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான். ஆனால் உன் கிளி இறக்குந் தறுவாயிலி ருக்கிறது. அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும். வா...

பிரார்த்தனை என்றும் வீண் போகாது....

*பிரார்த்தனை என்றும் வீண் போகாது....* ஒருவர் கிருஷ்ணபகவானின் அன்பான பக்தராக விளங்கினார். அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது. அந்த கடையின் ஒரு மூலையில், பகவான் கிருஷ்ணரின் சிறிய படம் வைத்திருந்தார். தினம் கடையை அவர் திறந்த உடன், கடையை சுத்தம் செய்து விட்டு கிருஷ்ண பகவானின் படத்தையும் சுத்தம் செய்வார். மிகுந்த மரியாதையோடு அந்தப் படத்திற்கு தூபம் ஏற்றுவார். அவருக்கு ஒரு மகன், அவன், தன் படிப்பை முடித்துக் கடையில் உட்கார்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தான். அவருடைய அப்பா செய்து கொண்டு இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பான். ஆனால் கடவுள் நம்பிக்கை கிடையாது. இந்த விஷயம் பற்றி அவனிடம் வாதாட அல்லது விவாதம் பண்ண விரும்பாமல், பக்தர் அமைதி காத்தார். காலம் கடந்து சென்றது. அவருக்கும் வயதாகி விட்டது. தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார். ஆகவே, ஒரு நாள் அவர் அவருடைய மகனிடம், “மகனே! நீ கடவுளை நம்புகிறாயோ இல்லையோ, எனக்கு ஒன்று போதுமானது. நீ கடின உழைப்பாளி, இரக்கமானவன், நேர்மையானவன். உன்னிடம் ஒன்று மட்டும் கேட்டு கொள்கிறேன் செய்வாயா?” என்றார். உறுதியா...

முயற்சி திருவினை ஆக்கும்

ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான்.  கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும்.  வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும்.  தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும்.  மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான்.  'போட்டியில் தோற்று விட்டால் கைகளை வெட்டி விடுவார்கள்.  உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள்.  அவன் சொன்னான், ' ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும்.  உயிரில்லையே' என்று கூறி விட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான். என்ன அதிசயம், கதவு சட்டெனத் திறந்து கொண்டது.  ஏனென்றால், கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை.  திறந்து தான் இருந்தது.  பல பேர் இப்படித் தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, எதையாவது, இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டு விடுகிறார்கள். அனைவரும் அறிந்த  'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம்.  நம்புங்கள் முயற்சி திருவினை ஆக்கும்.