சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்
🧚🏻♀️ *வாழ்க்கை களஞ்சியம்* 🧚🏻♂️ 🌳 *மரம்-2* 💐 *பூக்கள்-62* *சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்*
எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.
இளம் வயதில், சிங்கங்கள் பாயும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும், மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் பிற விலங்கினங்களும் கும் விட்டுச் செல்லும், காட்டினை ஆளும்.
ஆனால் அதனுடைய வாழும் காலம் சீக்கிரம் கடந்துவிடும்.
வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது; கொல்ல முடியாது; தன்னைத்தானே காத்துக் கொள்ளக் கூட முடியாது. திரியும், உறுமும், சீற்றம் குறையாது. இறுதியில் கழுதைப் புலிகள் ஒன்றுகூடி வயதான சிங்கங்களை அடித்து சாப்பிடும்.
அதுவும் சுலபமான மரணமாக இருக்காது. சிங்கங்கள் உயிரோடு இருக்கும்போதே அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடித்து தின்பன கழுதைப்புலிகள்.
பொதுவாக, ஒன்று இளம் வயதிலேயே வேட்டையாடும் போது ஏற்பட்ட காயங்களால் சிங்கங்கள் சாகும். இல்லையேல் வயதான காலத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு சாகும்.
இதுதான் உலகம்; இதுதான் வாழ்க்கை.
மிகவும் குறுகிய காலக் கட்டமான, இந்த வாழ்க்கை, மிகவும் தற்காலிகமானது.
அந்த தற்காலிகத்தை, நான் சிங்கங்களில் பார்த்திருக்கிறேன். வயதான நபர்களின் வாழ்க்கைகளில் பார்த்திருக்கிறேன். நீண்ட காலம் வாழ்ந்து இறுதியில் வலிமையற்று வீழும் ஒவ்வொரு மனித உயிரிலும் பார்த்திருக்கிறேன். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
அகிம்சை வழியில் வாழ்ந்த மகாத்மா காந்தி, ஆப்பிரகாம் லிங்கன் இன்னும் பலர் மறைந்த விதம் தீவிரவாதிகள் ஹிட்லர், சதாம் உசேன், போன்றவர்கள் இறந்த விதம்
இந்த உலகில் நிரந்தரம் என்று ஒன்றுமில்லை. காதல், ஆற்றல், தகுதி, திறமை ஆகிய அனைத்தும் காலத்தால் அழியும். காணாமற் போகும்.
அதனால், அன்பாக நடந்து கொள்ளுங்கள், அன்போடு இருக்கப் பழகுங்கள். கடந்தகாலம் நன்றாக கழிய எதிர்காலம் செழிப்பாய் அமையும்... உங்களின் மீதும் நீங்கள் செலுத்தும் அன்பின் மீதும் எப்போதும் நம்பிக்கைக் கொள்ளுங்கள்.. ✍🏻💝 *அன்புடன் 🌞 பானுசந்திரன் 🌝 (Man Of Success 🕶️)*💞
Comments
Post a Comment