Posts

Showing posts from September, 2025

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

 🧚🏻‍♀️ *வாழ்க்கை களஞ்சியம்* 🧚🏻‍♂️ 🌳 *மரம்-2* 💐 *பூக்கள்-62* *சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்* எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும். இளம் வயதில், சிங்கங்கள் பாயும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும், மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் பிற விலங்கினங்களும் கும் விட்டுச் செல்லும், காட்டினை ஆளும். ஆனால் அதனுடைய வாழும் காலம் சீக்கிரம் கடந்துவிடும். வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது; கொல்ல முடியாது; தன்னைத்தானே காத்துக் கொள்ளக் கூட முடியாது. திரியும், உறுமும், சீற்றம் குறையாது. இறுதியில் கழுதைப் புலிகள் ஒன்றுகூடி வயதான சிங்கங்களை அடித்து சாப்பிடும். அதுவும் சுலபமான மரணமாக இருக்காது. சிங்கங்கள் உயிரோடு இருக்கும்போதே அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய் கடித்து தின்பன கழுதைப்புலிகள். பொதுவாக, ஒன்று இளம் வயதிலேயே வேட்டையாடும் போது ஏற்பட்ட காயங்களால் சிங்கங்கள் சாகும். இல்லையேல் வயதான காலத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு சாகும். இதுதான் உலகம்; இதுதான் வாழ்க்கை. மிகவும் குறுகிய காலக் கட்டமான, இந்த வ...

உதவுவதற்கு நல்லநேரம் கிடையாது

பில்கேட்ஸ் கம்பிப்யூட்டர் உலகின் ஜாம்பவான் உலகின் முதல் பணக்காரனாக இருந்தபோது ஒரு தடவை இந்தியா வந்திருந்தார்.. பில்கேட்ஸ்சை பார்த்து ஒருவர் கேட்டார்... உங்களை விட பணக்காரர் வேறு யாராவது இருக்கிறாரா? பில்கேட்ஸ்: ஆம் ஒருவர் இருக்கிறார்.. யார் அவர்? பில்கேட்ஸ்: பல வருடங்களுக்கு முன் நான் வேலையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணப்பட்டேன். நியூயார்க் விமான நிலையம் சென்றேன் நாளிதழ்களின் தலைப்புகளை படித்துக்கொண்டு இருந்தேன் நாளிதழ் ஒன்றை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன்... ஆனால் என்னிடம் சில்லறை நாணயம் இல்லை எனவே அதை விடுத்தேன் அப்போது!.. ஒரு கறுப்பினச் சிறுவன் என்னை அழைத்து அந்த நாளிதழ் பிரதி ஒன்றை கொடுத்தான் என்னிடம் சில்லறை இல்லை என கூறினேன்... அதற்கு அந்த சிறுவன்.. பரவாயில்லை இலவசமாக கொடுக்கிறேன் என்றான்.. மூன்று மாதம் கழித்து நான் அங்கு சென்றேன். மறுபடியும் அதே கதைதான் நடந்தது... நாளிதளை இலவசமாக கொடுத்தான் ஆனால் நான் வாங்க மறுத்துவிட்டேன்.. அதற்கு அந்த சிறுவன்: பரவாயில்லை வாங்குங்கள், இன்று எனக்கு கிடைத்த லாபத்தில் இருந்து தருகிறேன் என்று சொல்லி கொடுத்தான்.... 19வருடங்கள் கழிந்தன நான் பணக்காரன் ஆக...

நமக்குள்ளே இருக்கும்

 *அழகான பதிவு* ஓர் சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்த போது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ''ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?'' என்று கேட்டார். ''தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்" என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார். அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், ''இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?''… என்று கேட்டார். அதற்கு சிற்பி, ''வேறு எங்கிருந்தும...