நாம் யாரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்
*பாடம் கற்றுக் கொள்...*
ஒரு ஊர்ல ஒரு அறிவாளி இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். ஒரு நாள், அவர் காட்டுக்குப் போகும் போது ஒரு நரியைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. அப்போது அவர் மனசுல ஒரு சந்தேகம்.
'இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியைப் போக்கி கொள்ள முடியும்..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்.
இப்படி யோசிச்சுக்கிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது. ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது. அதை சாப்பிட ஆரம்பித்தது. சாப்பிட்டது போக மீதியை அங்கேயே விட்டுட்டு சென்றுவிட்டது.
புலி போனதை அறிந்து, கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து வந்து மிச்சமிருந்ததை சாப்பிட்டது. திருப்தியாக அங்கிருந்து அகன்றது.
இதை கவனித்த அந்த மனிதன், ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ... தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்.. என்று எண்ணினான். அதுக்கப்புறம் அவர் காட்டுக்கே போறதில்லை. ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு..
சாப்பாடு வந்த பாடில்லே..!
ஒரு நாள் ராத்திரி நேரம்.. கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார்.
ஆண்டவா..! என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா...? என்று புலம்பினார். இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்..
' **முட்டாளே..! நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நரிகிட்ட இல்லே..! புலிகிட்ட..! புலியைப் போல் உழைத்து சாப்பிட்டு, மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடு" என்று சொன்னாராம்.*
*நாம் யாரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.**
Comments
Post a Comment