நெருக்கடி


*நெருக்கடி..!!*

உலகில் உள்ள பெரிய பெரிய நாடுகள் எல்லாம் தங்கள் நாட்டுக்கு அருகில் உள்ள குட்டி குட்டி தீவுகள் மீது போர் தொடுத்து அவற்றை ஆக்கிரமிக்க தொடங்கிய காலகட்டம்!

ஒரு கப்பலில் 500 வீரர்களை அனுப்பி 500 பேர் மக்கள் தொகை கொண்ட ஆதிவாசிகள் வாழ்கின்ற ஒரு தீவை கைப்பற்ற அனுப்பினார்கள். கப்பல் தீவை சென்றடைந்தது, சில நாட்களில் திரும்பி வந்தது, 500 வீரர்களும் கை கால் உடைந்த நிலையில் தோற்றுப் போய் திரும்பி வந்தார்கள், ஆதிவாசிகள் பின்னி எடுத்து விட்டார்கள்,

அடுத்த நாள் 1000 வீரர்களை கப்பலில் அனுப்பினார்கள். 1000 வீரர்களும் கை கால் இழந்த நிலையில் பயந்து ஓடி வந்தார்கள், மீண்டும் 2000 பேரை அனுப்பினார்கள். அவர்களுக்கும் அதே கதி தான், பின் 5000 பேர்! அவர்களுக்கும் அதே கதி!

இவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. வெறும் 500 ஆதிவாசிகள் ஆயுதங்களுடன் சென்ற 5000 பேரையும் தோற்கடித்து கை கால்களை உடைத்து திருப்பி அனுப்பி விட்டார்களே. எப்படி முடிந்தது என்று தீவிரமாக யோசித்தார்கள். பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்,

இந்த முறை வெறும் 500 பேரை மட்டுமே கப்பலில் அனுப்பினார்கள் இரண்டு நாள் நடந்த தீவிரச் சண்டையில் ஆதிவாசிகளை தோற்கடித்து விட்டார்கள் !

5000 பேர் சென்று தோற்ற இடத்தில் வெறும் 500 பேர் சென்று எப்படி ஜெயித்தார்கள்?!?!

இந்த முறை ஒரே ஒரு மாற்றத்தைத் தான் செய்திருந்தார்கள், 500 பேரை தீவில் இறக்கியதும் கப்பல் திரும்பி விட்டது. இனிமேல் இந்தத் தீவில் இருந்து திரும்பிச் செல்ல முடியாது, உயிருடன் வாழ வேண்டும் என்றால் தீவைக் கைப்பற்றியே ஆக வேண்டும்! இந்த நெருக்கடி தான் அவர்களை ஜெயிக்க வைத்தது!

இலட்சியத்தில் உறுதியாக இருப்பதை விட அதை அடைவதற்கான முயற்சியில் மிகவும் உறுதியாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

படிக்கட்டில் இறங்கி நீச்சல் கற்றுக் கொள்பவனை விட மேலிருந்து குதிப்பவனே எளிதில் நீந்துகிறான்..!!

Comments

Popular posts from this blog

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

உன் பேர் சொல்லு