செவிடாய் இரு

  *செவிடாய்* *இரு* 

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.

ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தைக் காண பலரும் கூடி இருந்தார்கள்.

ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தைத் தொட வேண்டும். அது தான் போட்டியின் விதி. 

முதலில் தொடுபவர் தான் வெற்றியாளர்.
போட்டியும் ஆரம்பமானது.

கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கிக் கத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியைத் தொடவே முடியாது! இது சாத்தியமே இல்லை” எனக் கூறினார்.

கூட்டத்திலிருந்து இப்படியாக கோஷங்கள் வந்த வண்ணமே இருந்தன.

மெல்ல ஒவ்வொரு தவளையாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து, போட்டியிலிருந்து விலகிக் கொண்டன.

“இதில் எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” கூடியிருந்தோர் தங்கள் கோஷங்களைத் தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.

இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டன. 

ஆனால், ஒரேஒரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.
எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள,
ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது சில வினாடிகளில் உச்சியைத் தொட்டு வெற்றியும் கண்டது.

அனைவரும் வியந்துபோய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது எனக் கேள்விகேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.

“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.
சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”

யானைக்கு முறம் போன்ற காது எதற்குத் தெரியுமா? யாவரும் காற்று வீச என்ற பதில்தான் சொல்வார்கள் . சிறிது யோசித்தால் அப்படியல்ல என்பதைத் தெரிந்துகொள்ளலாம் .

முறத்தில் வைக்கும் பொருளைப் புடைத்தால் நல்லவைகளைத் தக்க வைத்து , கேடுள்ளவைகளை அகற்றிவிடும் , அதேபோல முறம் போன்ற காது உடைய யானையும் , நல்லவைகளை மட்டும் கேட்டு, கெடுதல்களைப் புடைத்து எறிந்துவிடும் .

Comments

Popular posts from this blog

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

உன் பேர் சொல்லு