பிறரைக் குறை சொல்லும் பழக்கம்

 *எண்ணத்திற்கு எவ்வளவு வலிமை இருக்கிறது?*


ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை சந்தித்த நண்பர் ஒருவர் தன்னுடைய உறவினரைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருந்தார். 


திடீரென கலைவாணர் நண்பரின் பாக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்து “இந்தப் பர்ஸில் எவ்வளவு சில்லறை இருக்கிறது" எனக் கேட்டார்.


"தெரியவில்லை. எண்ணிச் சொல்கிறேன்” என்றார் நண்பர்.


''உமது பாக்கெட், உமது பர்ஸ், உமது பணம், இருந்தாலும் இதில் இருப்பதை எண்ணிச் சொல்ல வேண்டும் என்கிறீர்கள். ஆனால் உமது உறவுக் காரரைப் பற்றி எண்ணாமல், ஆராயாமல் ஏதேதோ சொல்கிறீரே” என்றார் கலைவாணர்.


வந்த நண்பர் குறை சொல்வதை நிறுத்திக் கொண்டார்.


பிறரைப் பற்றி எதிலும் குற்றம் காண்பதும், பார்க்கும் இடத்திலெல்லாம், "அது சரியில்லை இது சரியில்லை" என சொல்லித் திரிவதும் நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கு அழகல்ல.


நல்ல எண்ணங்கள் மனதில் இல்லாவிட்டால் எப்போதும் பிறரைக் குறை சொல்லும் பழக்கம் உருவாகிவிடும்.


எண்ணத்திற்கு எவ்வளவு வலிமை இருக்கிறது? என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு செயல். படுவது அவசியமாகும்.


நல்லதே நினைப்போம். நினைப்பது நிச்சயம் நிறைவேறும்.



*🍃Sri Yoga & Naturopathy*🍃


*யோகா இயற்கை வாழ்வியல் குழுமத்தில் இணைய Whatsapp 9952133415*

Comments

Popular posts from this blog

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

உன் பேர் சொல்லு