வாழ்க்கை உங்கள் மீது மண்ணை/துன்பத்தை வீசலாம்
ஒரு நாள் ஒரு விவசாயியின் கழுதை கிணற்றில் விழுந்து விட்டது. அம்மிருகம் மணிக்கணக்கில் சத்தமாக கத்திக்கொண்டே இருந்தது, விவசாயி அதை வெளியேற்றுவதற்கு ஏதாவது செய்ய முயன்றார். எதுவும் பலனளிக்கவில்லை.
கடைசியாக, கழுதைக்கு வயதாகிவிட்டதாலும், ஏற்கனவே கிணறு வறண்டுவிட்டதாலும், எப்படியும் கிணறு மூடப்பட வேண்டும்.. அதை இப்போதே நடத்திவிட விவசாயி முடிவு செய்தார்;
உண்மையில் கழுதையை கிணற்றில் இருந்து வெளியே இழுப்பது அவ்வளவு மதிப்புக்குரியதாகவும் இல்லை...
அக்கம்பக்கத்தினர் அனைவரையும் உதவிக்கு வருமாறு அழைத்தார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மண்வெட்டியைப் பிடித்து கிணற்றில் மண்ணை வீசத் தொடங்கினர்.
கழுதை என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து பயங்கரமாக கத்தியது. பின்னர், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், சில மண்வெட்டிகளுக்குப் பிறகு அது அமைதியாகிவிட்டது.
கிணற்றுக்குள் எட்டி பார்த்தபோது விவசாயி, அவன் பார்த்ததைக் கண்டு வியந்தான்... ஒவ்வொரு மண்வெட்டி மண்ணிற்கும், கழுதை நம்பமுடியாத ஒன்றைச் செய்து கொண்டிருந்தது:
அது தன்மீது விழும் மண்ணை உதறி அசைத்து, மண்ணின் மேல் நின்று கொண்டிருந்தது.
மிக விரைவில், கழுதை கிணற்றின் வாய்பகுதியை அடைந்து, விளிம்பிற்கு மேல் சென்று, வெளியே ஓடிச் சென்றதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
வாழ்க்கை உங்கள் மீது மண்ணை/துன்பத்தை வீசலாம். அது பல விதமானவைகளாக... இருக்கலாம்.
பிரச்சனைகள் நம்மை மூடி அழிப்பதிலிருந்து வெளியேறுவதற்கான தந்திரம், அதை அசைத்து, கீழே வீழ்த்தி.. அதைப் பயன்படுத்தி மேலே செல்வதுதான். நம் ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு படி மேலே செல்ல பயன்பட போகிறது. நாம் பிரச்சினைகளை கண்டு பயந்து.. அடிபணியாவிட்டால்... எவ்வளவு ஆழமான பள்ளத்திலிருந்தும் வெளியேறலாம்... ✨
நவீன வாழ்வியல் மற்றும் உடல்நல கேடுகளில்.. எவ்வளவு ஆழமாக சிக்கியிருந்தாலும்... நமது மனநிலையில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டு செயலில் இறங்கினால்.. அதிலிருந்து வெளியேறி விடலாம்...
ஒரு கழுதையால் முடிகிறது.. நம்மாலும் முடியும்..
Comments
Post a Comment