ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு; அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!

 ஒருவன் பல இடங்களில் பெண் பார்த்து ஒருவழிய நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி? என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.

கடை வீதிக்குப் போனான். கடையில் ஒரு பொருளைப் பார்த்தான். இதுவரையில் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு பொருள் அது.

‘‘அது என்னங்க?’’ என்று விசாரித்தான்.

‘‘அதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’ என்றார் கடைக்காரர்.

‘‘அப்படின்னா என்னங்க... அது எதுக்கு உபயோகம்?’’

‘‘இதுக்குள்ளே சூடான பொருளை வெச்சா சூடாவே இருக்கும்! குளிர்ச்சியான பொருளை வெச்சா குளிர்ச்சியாவே இருக்கும்!’’.என்றார் 

‘‘அப்படியா அப்படின்னா அதுலே ஒண்ணு கொடுங்க!’’ வாங்கிக் கொண்டு உற்சாகமாக வீட்டிற்கு புறப்பட்டான்.

மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அவன் திட்டம். அந்தத் திட்டப்படி மேலும் சில பொருள்களை வாங்கிக் கொண்டு வேகமாக நடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

‘‘சீக்கிரம் இங்கே வா!’’ என்று மனைவியை அழைத்தான்.

அவள் வந்தாள். பார்த்தாள். ‘‘என்னங்க இது?’’

‘‘இது ஒரு புதுமையான பாத்திரம்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! இதன் பெயர் தர்மாஸ்ஃபிளாஸ்க்!’’

‘‘எதுக்கு இது?’’ என்று தெரியாதது போல கேட்டாள்.

‘‘இது சூடான பொருளைச் சூடாகவும், குளிர்ச்சியான பொருளைக் குளிர்ச்சியாகவும் அப்படியே வெச்சிருக்கும்!.

மனைவி கேட்டாள்: ‘‘உள்ளே என்ன இருக்கு?’’

அவன் சொன்னான்:

 ‘‘ஒரு கப் காபியும் + ஒரு கப் ஐஸ்கிரீமும்!’’

மனைவி மயங்கி விழுந்தாள்.

ஒன்றைத் தெரிந்து கொள்வது என்பது வேறு; அதைப் புரிந்து கொள்வது என்பது வேறு!

*ஆன்மீகமும் அப்படித்தான். புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அதைத் தெரிந்து கொள்வதோடு நிறுத்தி விடுகிறவர்களுக்குத்தான் தேவை இல்லாத குழப்பங்கள் எல்லாம் வந்து சேர்கின்றன.*

Comments

Popular posts from this blog

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

உன் பேர் சொல்லு