சில சந்தர்ப்பங்களில் வாய் மூடி இருக்க பழகிக்கொள்ளுங்கள்

_மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது . மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்._

_(1)- மதத்தலைவர்_
_(2)- வழக்கறிஞர்_
_(3)- இயற்பியலாளர்_ 

_முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._ 

_ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்._ 

_மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர். மதத்தலைவர் தப்பிவிட்டார்._

_அடுத்ததாக வழக்கறிஞர், 
              அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._

_"நீதி! நீதி! நீதியே வெல்லும்" என்றார்._

_மேடை இழுக்கப்பட்டது, வழக்கறிஞரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! நீதி அவரை காப்பாற்றிவிட்டது. என்றனர். வழக்கறிஞர் தப்பிவிட்டார்._

_அடுத்ததாக இயற்பியலாளர் அழைத்துவரப்பட்டார். அவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. "கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?" என வினவப்பட்டது._

_எனக்கு ஆண்டவன் பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது. ஆனால் அங்கே தூக்கு மேடை கயிற்றில் ஒரு முடிச்சு இருக்கிறது. அதனால்தான் கயிறு கழுத்தை பதம் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்" என்றார்._  

_உடனே தூக்குமேடையை பரிசீலித்தனர். அங்கே அந்த கோளாறு இருந்தது. அதனை சரி செய்தனர். பின்னர் இயற்பியலாளர் தூக்கில் ஏற்றப்பட்டு தலையும் துண்டிக்கப்பட்டது._ 

நீதி:-
--------
 _சில சந்தர்ப்பங்களில்_ 
_வாய் மூடி இருக்க பழகிக்கொள்ளுங்கள்!_

 _தெரிந்த உண்மைகளையெல்லாம் உளரிக்கொட்டுவதால் உங்கள் கழுத்துக்கே கூட ஆபத்தாகலாம்!!_

 _சிலவேளை முட்டாளாக_ _இருப்பதுதான்_
_புத்திசாலித்தனமானது!_

Comments

Popular posts from this blog

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

உன் பேர் சொல்லு