போராட்டம்

*ஒரு குட்டிக் கதை...!!*😌😌😌

*கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.*

*”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்த போது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.*

*பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”*
என்றான்.

கடவுள் உடனே, 
*“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்”* என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

*”மழையே பெய்”* என்றான். 

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது, 
மழை நின்றது. 

ஈரமான நிலத்தை உழுதான்.

*தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.*

*மழை, வெயில், காற்று* எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. 

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

*அறுவடைக் காலமும் வந்தது.* 

*விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.*

அதிர்ந்தான். 

*உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.*

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் *ஒன்றிலுமே தானியம் இல்லை.*

*”ஏ கடவுளே!”* என்று கோபத்தோடு கூப்பிட்டான். 

*“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்!* *ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?”* எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்: 😌
*“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும்.* அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

*மழை குறைந்தால்,* தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

*🌻போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.*🌻

*எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.*

*தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!”* என்றார்.

வேண்டாமய்யா, *உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்”* என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

*🌞🌞பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும் போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.*🌞🌞

💠💠*இருட்டு* என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டு பிடிக்கப்பட்டது.

🌾🌾🌾*பயணம்* என்பது பிரச்சினையான போதுதான் வாகனம் உருவானது.

*🤔பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?*🙏🙏

*பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..*

*எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!*

*போராடித்தான் பாப்போமே...*😀😀😀👍👍👍👍

Comments

Popular posts from this blog

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

உன் பேர் சொல்லு