பொறுமை
புத்தரின் ஆசிரமத்திற்குள் நுழைந்த ஒரு வியாபாரி அவர் கன்னத்தில் அடித்தான். தான் பாடுபட்டுச் சேர்த்த சொத்துக்களை விட்டுவிட்டு தனது குழந்தைகள் புத்தரின் ஆசிரமத்தின் சேர்ந்ததே அவனது கோபத்திற்கு காரணம்.
புத்தர் அவனை பார்த்து புன்னகைத்தார். ஒரு வார்த்தையோ எதிர்வினையோ காட்டவில்லை. அந்த வியாபாரியும் அதிர்ச்சியுடன் வீடு திரும்பினான். அவனால் அன்று இரவு உறங்க முடியவில்லை் அந்த வியாபாரிக்கு அவன் இதுவரை கண்டு வந்த உலகமே தலை கீழாக மாறிவிட்டது. அடுத்த நாள் விடிந்தும் விடியாமல் ஆசிரமத்துக்கு போனான், அந்த வியாபாரி. புத்தரிடம் நேரடியாகச் சென்று புத்தர் கன்னத்தில் அறைந்ததற்கு மன்னிப்பு கேட்டான். "என்னால் உன்னை மன்னிக்க முடியாது"என்றார் புத்தர். 'என்ன தவறு செய்தாய் மன்னிப்பதற்கு' என்று கேட்டார்.
முன்தினம் நடந்ததை வியாபாரி நினைவு படுத்தினான் அதற்கு புத்தர் அமைதியாக "அந்த நபர் இப்போது இங்கு இல்லை. நீ அடித்தவரை நான் எப்போதாவது சந்தித்தால் அவனிடம் நீ மன்னிப்பு கேட்டதாக சொல்கிறேன். இங்கே இப்போது இருக்கும் இந்த நபருக்கு நீ எந்தத் தவறையும் இழைக்கவில்லை" என்றார்.
🙏 ஆம் இறந்த காலத்தில் நடந்தவற்றை நினைப்பதால் எந்தப் பயனுமில்லை.
🙏 நிகழ்காலத்தில் வாழப் பழகிக் கொள்ளவேண்டும்.
🙏அடுத்தவர் எமக்குச் செய்த துன்பங்களை மறந்து விட குறைந்தபட்சம் முயற்சியாவது செய்ய வேண்டும்.
🙏மன்னிக்க, மன்னிப்புக் கேட்க பழக வேண்டும்.
🙏தவறு செய்தவருக்கு திருந்த சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
🙏 பொறுமையானது அனைத்தையும் பெற்றுத்தரக் கூடியது.
🙏அது மட்டுமல்லாமல் ஒருவன் தான் செய்த தவறை தவறு என்று உணர்ந்த தருணத்தில் நமது குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன என்பதை புத்தர் இந்த கதையில் மிக எளிமையாக உணர்த்தியிருக்கிறார்.
Comments
Post a Comment