உறுதியான மனோதிடத்தால் தான்! எது நடந்தாலும் மன தைரியம் வேண்டும் வாழ்வில் வெற்றி காண...
மாவீரன் நெப்போலியன் சிறு வயதில்
ராணுவ விடுதியில் படித்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் ஒரு நாள் நெப்போலியன் .
அறைக்கு பக்கத்து அறையில் உள்ள மற்றொரு மாணவனின் அழகான பை காணாமல் போய் விட்டது .
உடனே அந்த மாணவன் தன் மேலதிகாரியிடம் புகார் கொடுத்தான் . உனக்கு
யார் மேலையாவது சந்தேகம் இருக்கானு அந்த மேலதிகாரி கேட்டார்.
அதற்கு அந்த மாணவன் நெப்போலியன் மீது தான் எனக்கு சந்தேகம் என்று
கூறினான்.
உடனே அந்த அதிகாரி நெப்போலியனை தன் அறைக்கு அழைத்தார்.
நெப்போலியன் வந்தவுடன் அந்த அதிகாரி எதையும் விசாரிக்காமல் இனி
திருடுவியா
என்று நெப்போலியனை அடிக்க ஆரம்பித்தார் .
நெப்போலியன் எதுவும் பேசாமல் அடியை வாங்கி கொண்டார். , சிறிது நாட்கள்
கழித்து அந்த மாணவன் தன் மேலதிகாரியிடம் ,
அன்று தன் பையை திருடியது நெப்போலியன்
இல்லை , வேறொரு மாணவன் ” என்று கூறி மன்னிப்பு கேட்டான்.
மேலதிகாரி தவறு செய்யாத நெப்போலியனை அடித்து விட்டோமே என்று
வருத்தப்பட்டு, நெப்போலியனை தன் அறைக்கு அழைத்தார்.
நெப்போலியன் அறைக்கு வந்தவுடன் செய்யாத தவறுக்கு அன்று ஏன் அடி
வாங்கினாய்
அன்றே திருட வில்லை என்று கூறி இருக்கலாமே என்று மேலதிகாரி கேட்டார் .
அதற்கு நெப்போலியன் நீங்கள் அடிக்கும்
முன்பே கேட்டு
இருந்தால் நான் கூறி இருப்பேன் ,
ஆனால் நீங்கள் எதையும் கேட்காமல் அடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்
அப்பொழுது
நான் திருடவில்லை என்று கூறி இருந்தால் அடிக்கு பயந்து கூறியதாக நினைத்து இருப்பீர்கள் .
நான் பயந்ததாக யாரும் நினைத்து விடக் கூடாது என்பற்க்காகத்தான் அப்பொழுது எதுவும்
கூறவில்லை என்று நெப்போலியன் கூறினார்.
நெப்போலியனை மாவீரன் என்று அழைப்பதற்கு
காரணம் அவரின் வெற்றிகளால் அல்ல ,
அவரின் *உறுதியான மனோதிடத்தால் தான்! எது நடந்தாலும் மன தைரியம் வேண்டும் வாழ்வில் வெற்றி காண...*
Comments
Post a Comment