யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்
*ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்*
*வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை*
*தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னியை மாற்ற ஆரம்பித்தார்*
*அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,கால் தடுக்கிக் கீழே விழுந்தார்*
*கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய் பக்கத்தில் இருந்த சாக்கடையில் விழுந்தன*
*என்ன செய்வது?" என்று யோசித்தார்*
*அப்போது கிழிந்த ஆடையுடன் ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்*
*அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்*
*அந்த விஞ்ஞானி தன் மனதிற்குள் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணினார்*
*அவனிடம்*
*இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து கொடுக்க முடியுமா எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றார்*
*அதற்கு வழிப்போக்கன் இதுதான் உங்கள் பிரச்சினையா அந்தக் சாக்கடையில் இறங்கி போல்ட்டுகளை எடுத்துத் தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது என்றார்*
*அப்படியா? என்று ஆர்வத்துடன் கேட்டார் விஞ்ஞானி*
*மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார் செய்து கொள்ளுங்கள் வண்டியை ஓட்டிச் சென்று அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் ஒவ்வொன்றாக மாட்டிக் கொள்ளுங்கள்" என்றான்*
*விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும் இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே இவரைப்போய் குறைத்து மதிப்பிட்டு விட்டோமே என்று தலை குனிந்தார்*
நீதி :
*உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு*
*உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு*
*நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்*
*யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்*
உங்களில் ஒருவன் 👍
Comments
Post a Comment