கிடைத்தவைகளை அனுபவிக்கத் தெரியாமல், கிடைக்காதவைகளைதேடி அலைந்து, உடலும் - மனமும் சோர்ந்து, துன்பப்படுகிறோம்



*ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு, பணப் பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு, டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார்.*

வண்டியின் அதிர்வில், அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, *100 நூறு ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு, கீழே விழுந்து விடுகிறது.*

அது தெரியாமல் அந்த நபர், வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று விடுகின்றார். *(அந்த நபர், இக்கதையில், இனி வரமாட்டார்)*

கீழே விழுந்த வேகத்தில்,100 நூறு ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து, *ஒரே ஒரு நூறு ரூபாய் நோட்டு மட்டும், விடுபட்டு காற்றில் பறந்து, சிறிது தூரத்தில் கிடக்கிறது.*

அந்த ஒற்றை நூறு ரூபாய் நோட்டு கிடந்த வழியில், ஒருவன் வருகிறான்.

அந்த நோட்டைக் கண்டு, *'இன்று எனக்கு அதிர்ஷ்டமான நாள் போல'* என நினைத்து, மிகவும் சந்தோஷ மடைகிறான்.

அந்த நோட்டை எடுத்துக்கொண்டு, நல்ல ஒரு ஹோட்டலுக்குப் போனான்.

*ஒரு தோசை (40ரூபாய்) ,2 இட்லி (இருபது ரூபாய்), ஒரு காப்பி (இருபது ரூபாய்) சாப்பிட்டான். வயிறும், மனதும் நிறைந்தது போல் இருந்தது.*

*பில் வந்தது. பார்த்தான், GST வரியோடு 90 ரூபாய் ஆகியிருந்தது.*

சர்வரிடம் நூறு ரூபாயைக் கொடுத்தான்.

சர்வர் பில்லைக் கட்டிவிட்டு, மீதி 10 ரூபாயைத் தட்டில் வைத்துத் தந்தார்.

டிப்சா வச்சுக்கோப்பா என்றான்.
*சந்தோஷமாக வீடு திரும்பினான்.*

மீதி 99 நூறு ரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு, அது விழுந்த இடத்திலேயே கிடந்தது.

*அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான். பரபரவென்று எண்ணினான்.*

*99 நோட்டுகள். மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான். 99 நோட்டுகள்தான்.*

வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்க மாட்டார்களே....?
*அந்த ஒற்றை நூறு ரூபாய் நோட்டு இங்கே பக்கத்தில் எங்கேனும் தான் கிடக்க வேண்டு மென்று, தேட ஆரம்பித்தான்...!*

அந்த ஒற்றை நூறு ரூபாயைத்
தேடினான்.... தேடினான்.... தேடினான்....

*இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான்!*

*ஒற்றை நூறு ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு, சந்தோஷமாகச் சென்றான்.*

*9900 ரூபாய் கிடைத்தவன், அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு நூறு ரூபாய்க்காக அல்லாடிக் கொண்டு இருக்கிறான்.*

*கருத்து:--* நாம் இப்படித்தான்!

*கிடைத்தவைகளை அனுபவிக்கத் தெரியாமல், கிடைக்காதவைகளைதேடி அலைந்து, உடலும் - மனமும் சோர்ந்து, துன்பப்படுகிறோம் !*

Comments

Popular posts from this blog

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

உன் பேர் சொல்லு