கவனம்
*தேன்கூடு தினம் ஒரு கதை.. (23.06.2020)*
*வார்த்தை வெல்லும் கொல்லும்..*
ஒரு அரசருக்கு அவருடைய, எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக *ஒரு கனவு வந்தது..*
காலையில் பீதியுடன் எழுந்த அரசர்,
அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று.. பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார்..
அந்த நாடி ஜோதிடர், தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் *பொக்கை வாய் கனவு* பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு..
*"அரசே ! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம், உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்.. "*
என்று பலன் சொன்னார்..
அந்த அரசர் மிகவும் கோபமுற்று *"இவரைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்..!"* என்று உத்தரவிட்டார்..
அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை..
இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து..
அவரிடம், *தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன..?* என்று வினவினார்..
அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார்..
அவரும் அதைப்பார்த்துவிட்டு, *"மன்னா..! உங்கள் சொந்த, பந்தங்களை எல்லாம் விட.. நீங்கள் நீண்ட காலம் நீடூழி வாழ்வீர்கள்.."* என்று பலன் கூறினார்..
இதனால் மனம் குளிர்ந்த அரசர், அந்த *ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்..*
_இருவரும் அதே ஓலையைத் தான் படித்தார்கள்..!_
_அதே விஷயத்தைதான் சொன்னார்கள்.._
*ஒருவர் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார்..!*
*இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார்..!*
*அவ்வளவு தான் வித்தியாசம்..!*
_பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால்,_
_"வாழ்க்கையை ஜெயிக்கலாம்.."_
🐝
*நாம் பேசும் வார்த்தைகள், மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே..* தவிர,
எந்தவித மனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக்
கொள்ளவேண்டும்..
🐝
Comments
Post a Comment