நாட்டு சர்க்கரை இலவசம்

 வீரமணி ஒரு ஓட்டல் நடத்தி வந்தார்!

அவர் கடையில் தோசைக்கு தொட்டு கொள்ள நாட்டு சர்க்கரை இலவசமாக கொடுப்பார்கள்!


ஆனால் நாட்டு சர்க்கரை விலை ஜாஸ்தி ஆனதாலே கட்டுப்படி ஆகலே.


ஒரு போர்டு எழுதி போட்டார்!

"இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"


Sixth Sense அந்த ஓட்டலுக்கு வாடிக்கையாளர்!

சாப்பிடப் போனார்.  முதலில் ஒரு தோசை வாங்கினார்.


இரண்டாவது ஒரு தோசை வாங்கினார்.

நாட்டு சர்க்கரை கேட்டார்.


 வீரமணி சொன்னார் "நாட்டு சர்க்கரை   கிடையாது"!


Sixth Sense சொன்னார் "போர்டை படிங்க  "முதல் தோசைக்கு மட்டும் கிடையாது"!


"இது இரண்டாவது தோசை"! 

வீரமணி தன் தலையில் குட்டிக்கொண்டே நாட்டு சர்க்கரை கொடுத்தார்!


அடுத்த நாள் போர்டை மாற்றி எழுதினார்

"இனிமேல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"


Sixth Sense மறுநாள் வந்தார்!

இரண்டு தோசைக்கு ஆர்டர் கொடுத்தார்!

ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு தோசை வந்தது! மேலே உள்ள தோசையை சாப்பிட்டு முடித்தார்!

நாட்டு சர்க்கரை கேட்டார்!


வீரமணி " முடியாது போர்ட பாருங்க" !


Sixth Sense  நீங்க பாருங்க போர்ட.  

இனி" மேல் " தோசைக்கு தானே கிடையாது?

கீழே உள்ள தோசைக்கு கொடுங்கன்னார்.


வீரமணி  ஹோட்டலில் தோசைபோடுவதையே நிறுத்திவிட்டார் !!!


யார்கிட்ட..!?

Comments

Popular posts from this blog

நல்ல எண்ணங்களையே மனதில் உதிக்குமாறு எப்படி செய்வது?

சிங்கத்தின் வீரம், வேகம், கடைசி காலம்

உன் பேர் சொல்லு