உதயசூரியன்(தி.ஜானகிராமன்)
__________________________________
உதயசூரியன்
(தி.ஜானகிராமன்)
____________________________________
தி.ஜா வின் பயணநூல் (ஜப்பான்) இது.சொல்லழகும், பொருளழகும் இலக்கிய ரசனைக்கு உகந்தவை எனும் கோட்பாடு கொண்ட தி.ஜா வின் படைப்பாற்றலை இந்த நூலிலும் பல இடங்களில் காணலாம்.
முதல் வெளிநாட்டுப் பயணம், முதல் விமானப் பயணம், புதிய அனுபவ வியப்பு இவருக்கும் ஏற்பட்டதை விவரிக்கிறார்.
ரசனையோடு, தி.ஜா வர்ணிக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் - பல மொழிகளை போதிக்கும் ஜப்பானிய வானொலி - அங்கு வளர்ந்துவரும் தொழில் - விவசாய செழிப்புகள் - மனித உழைப்பு - கல்வி போதனை - காஞ்சியிலிருந்து சீனம் வழியாக ஜப்பான் சென்று பரவிய பௌத்த "ஸென் " சமயம் - கின்ஸா சதுக்கம் - டோக்கியோ கோபுரம் - அழகிய கியோத்தோ நகரம் ....இப்படி பல செய்திகளை, அவர் பாணியில் படிப்பதில் தனி சுகம்.
ஆசிரியர் சொல்லும் விதம், கவனித்த கண்ணோட்டம், சிந்தித்த உணர்வு ..இவையெல்லாம் புதுமையாக இருப்பதால் இலக்கிய ரசிகர்கள் இந்நூலை படித்து மகிழலாம்..
(விலை : ரூ 60)
(ஐந்திணைப் பதிப்பகம்)
Comments
Post a Comment